அண்ணாமலைக்கு கொலை மிரட்டல்: இஸ்லாமிய அடிப்படைவாதி கைது!

அண்ணாமலைக்கு கொலை மிரட்டல்: இஸ்லாமிய அடிப்படைவாதி கைது!

Share it if you like it

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் தலையை துண்டிக்க வேண்டும் என்று முகநூலில் பதிவிட்டு கொலை மிரட்டல் விடுத்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர் போலீஸார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தமிழக பா.ஜ.க. தலைவராக இருப்பவர் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை. படிப்பும், திறமையும் இருப்பதால், தமிழக அரசியல்வாதிகளை வெளுத்து வாங்கி வருகிறார். இவரது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அரசியல்வாதிகள் திணறி வருகின்றனர். அதேபோல, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு மிகவும், நிதானமாகவும், துணிச்சலாகவும் கருத்துகளை தெரிவித்து வருகிறார். சமீபகாலமாக தி.மு.க. ஆட்சியில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்தி வருகிறார். குறிப்பாக, சென்னை எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான டெண்டரைபி.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனத்துக்கு தி.மு.க. அரசு வழங்கியது தொடர்பான ஊழலை அம்பலப்படுத்தினார்.

மேலும், ஸ்டாலின் துபாய் பயணம், 5,000 கோடி ரூபாய் துபாய் முதலீடு ஆகியவை குறித்து கடுமையான விமர்சனம் செய்திருந்தார். இவரது புள்ளிவிபர கருத்துக்களுக்கு பதில் கொடுக்க முடியாமல் திணறும் தி.மு.க.வினர், அண்ணாமலை மீது 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு போடப்போவதாகக் கூறி மிரட்டிப் பார்த்தார்கள். அதேபோல, அவதூறு வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்போவதாகவும் மிரட்டிப் பார்த்தது. ஆனால், அண்ணாமலை எதற்கும் அசரவில்லை. நான் சிறைக்குச் சென்றாலும் பரவாயில்லை. தி.மு.க. அரசு செய்யும் அனைத்து ஊழல்களையும் அம்பலப்படுத்துவேன் என்று துணிச்சலாக அறிவித்தார்.

இந்த நிலையில்தான், இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான பழனி பாபா மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த யூசுப் என்கிற பாபா யூசுப் என்பவன், தனது முகநூல் பக்கத்தில், அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுத்து பதிவிட்டிருந்தான். திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த இவன், அண்ணாமலை படத்தையும், கத்திகள் படத்தையும் வைத்து, இந்து மதவெறியும், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் தலையை துண்டிக்க வேண்டும் என்று தனது முகநூலில் பதிவு செய்திருக்கிறான். இதையடுத்து, இதுகுறித்து பா.ஜ.க.வினர் மேலப்பாளையம் போலீஸில் புகார் செய்தனர். போலீஸாரும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பாபா யூசுப்பை கைது செய்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே, ஹிஜாப் தொடர்பாக தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த தவ்ஹீத் ஜமா அத் அமைப்பைச் சேர்ந்த அடிப்படைவாதிகள் கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, நீதிபதிகளுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதோடு, கொலை மிரட்டல் விடுத்த அடிப்படைவாதிகளையும் கைது செய்தனர். இந்த நிலையில், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு அடிப்படைவாதிகள் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்.


Share it if you like it