புதிய தலைமுறை ஊடகம் ஏற்பாடு செய்து இருந்த நேர்காணலில் தமிழக பா.ஜ.க தலைவர் கலந்து கொண்டார். அப்பொழுது, நெறியாளர் பா.ஜ.க மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தும் விதமாகவும், தி.மு.க.விற்கு ஆதரவாகவும் கேள்விகளை எழுப்பினார். இதற்கு, அண்ணமாலை அளித்த பதில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள், பத்திரிக்கைகள் மற்றும் நெறியாளர்கள் தி.மு.க.வின் ஆசி பெற்றவர்கள் என்பது பலரின் எண்ணம். அதனை மெய்ப்பிக்கும் விதமாக, ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும், மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நெறியாளர்கள் தொடர்ந்து செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில், டெல்லி வன்முறை சம்பவத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள், விவசாயிகள் என்கின்ற போர்வையில், மிகப்பெரிய கலவரத்தை அரங்கேற்றி இருந்தனர். நாடு முழுவதும் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்து இருந்தன. அப்பொழுது, இது குறித்தான ஊடக விவாதம் புதிய தலைமுறையில் நடைபெற்றது.
தேசிய கொடியை தூக்கி எரிந்து அவமதித்த, வன்முறையாளர்களுக்கு முட்டு கொடுக்கும் விதமாக நெறியாளர், கார்த்திகேயன் நடந்து கொண்டார்.
அதே போல, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை வரவேற்கும், பணியில் ஈடுபட்ட 13-வயது உடைய தினேஷ் என்னும் சிறுவன் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தான். இச்சம்பவம், இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அப்பொழுதும், இதே ஊடக நெறியாளர் கார்த்திகேயன், தி.மு.க.வின் மீது மக்களுக்கு கோவம் ஏற்படாத வண்ணம், புதிய தலைமுறையில் விவாதத்தை நடத்தி இருந்தார். மேலும், பண மோசடி புகாரில் சிக்கிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகச் சிறப்பாக முட்டு கொடுத்திருந்தார்.
இப்படி, தி.மு.க.வின் ஆதரவாளர் போல செயல்பட்டு கொண்டு இருக்கும் நெறியாளர், தமிழக பா.ஜ.க தலைவரிடம் நேற்றைய தினம் நேர்காணல் ஒன்றினை நடத்தியுள்ளார். அதில், வழக்கம் போல தி.மு.க.விற்கு ஆதரவாகவும், பா.ஜ.க.விற்கு எதிரான வகையிலும் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு, அண்ணமாலை அளித்த பதில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன் லிங்க் இதோ.