அண்ணாமலைக்கு குவியும் வாழ்த்து: காரணம் இது தாங்க!

அண்ணாமலைக்கு குவியும் வாழ்த்து: காரணம் இது தாங்க!

Share it if you like it

தலைவராக பொறுப்பு ஏற்று ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை ஐபிஎஸ் கடந்த ஆண்டு ஜூலை – 8 ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார். அந்த வகையில், இவர், தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டு இன்றோடு தனது ஒரு வருட காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இதனிடையே, கடந்த ஒரு வருட காலத்தில் இவர் நடத்திய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று இருக்கிறது.

இது தவிர, ஆளும் கட்சியான தி.மு.க.வின் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களை தெரிவித்து வருகிறார். மேலும், அதற்குறிய ஆதாரங்களை தொடர்ந்து மக்கள் மன்றத்தில் முன் வைத்தும் வருகிறார். அந்தவகையில், அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தத்தின் மகள் லாவண்யா கிறிஸ்தவ பள்ளியின் மத மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம், தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதும் கொண்டு சென்று மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் அண்ணாமலை.

இதனை தொடர்ந்து, தருமபுர ஆதீனத்தின் சார்பில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு, திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்த ஒரே காரணத்திற்காக விடியல் அரசு திடீர் என தடை விதித்து இருந்தது. இச்சம்பவம், ஹிந்துக்கள் மத்தியில் பெரும் கோவத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தன.

இதையடுத்து, களத்தில் இறங்கிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது. ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதினத்திடம் கோரிக்கை வைப்போம். கோபாலபுர குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கிச் சுமப்பதை போல் அல்ல இது. ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவையின் உள்ள வேறுபாடுகளைக் கூட அறியாதவர் இந்த கோபாலபுர குடும்பத்தார் இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தயாராக இருக்கிறது என்று அதிரடியாக தெரிவித்து இருந்தார். இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த விடியா அரசு உடனே தனது தடை திரும்ப பெற்றது.

அதேபோல, உலகப் புகழ் பெற்ற திருவாரூர் கோவிலின் தெற்கு ரத வீதிக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் வைக்க வேண்டும் என்று திருவாரூர் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. பல்லாண்டு காலமாக இருந்து வரும் தெருவின் பெயரை மாற்றி ஒரு நாத்திகவாதியின் பெயரை வைப்பதா? என அவ்வூர் மக்கள் தங்களது கோவத்தை வெளிப்படுத்தி இருந்தனர். மேலும், ஹிந்துக்களை இந்த அரசு மீண்டும் சீண்டி வருகிறது என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த விஷயம், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் காதுக்கு எட்டியது. இதையடுத்து, நேரடியாக களத்தில் இறங்கி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார். இதனால், பயந்து போன ஆளும் கட்சி அந்த உத்தரவினை ரத்து செய்து பின் வாங்கியது.

இதுபோல, ஆளும் கட்சியின் ஊழல் புகார்களை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு தெரிவித்து வருகிறார். இதன் மூலம் உண்மையான எதிர்க்கட்சி பா.ஜ.க தான் என்பதை மக்கள் மனதில் பதிய வைத்தவர் அண்ணாமலை என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்த நிலையில் தான், இவர் தமிழக பா.ஜ.க தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டு இன்றோடு ஒரு வருடத்தை பூர்த்தி செய்து இருக்கிறார். இதனை தொடர்ந்து, பா.ஜ.க மூத்த நிர்வாகிகள் முன்னாள் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள், அண்டை மாநில பா.ஜ.க தலைவர்கள் என பலர் அண்ணாமலைக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it