மூத்த பத்திரிகையாளர் மணி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை குறைத்து மதிப்பிட வேண்டாம் என இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
தமிழக பா.ஜ.க. தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவர், தமிழகத்தின் இளம் அரசியல் தலைவராக இருந்து வருகிறார். இவருடைய வருகைக்கு பின்பு பா.ஜ.க.வின் வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இவரின், எழுத்தாற்றல், பேச்சாற்றல் தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக, மாற்று கட்சியை சேர்ந்த தலைவர்கள் கூட பா.ஜ.க.வை நோக்கி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு மக்களிடம் கிடைக்கும் செல்வாக்கை தடுக்கும் விதமாக தி.மு.க. மற்றும் அதன் ஆசி பெற்ற ஊடகங்கள் இன்று வரை மிக கடுமையாக போராடி வருகின்றன. அதேபோல, பா.ஜ.க.வின் வளர்ச்சியை தடுக்கும் வகையில், வி.சி.க. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மிக தீவிரமாக கள பணியாற்றி வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில் தான், பிரபல யூடியூபர் ராஜவேல் நாகராஜன் சமீபத்தில் கூறியதாவது; அண்ணாமலையை தவிர்த்து விட்டு இனி அரசியல் செய்ய முடியாது. அந்த இடத்தை விட்டுக் கொடுக்க, அவர் தயாராக இல்லை. இனி, அவரோடு இணைந்தோ அல்லது அவரை எதிர்த்தோ தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையை கடந்த, ஒரு வருடத்திற்குள் அவர் உருவாக்கி விட்டார். நீங்கள் அவரை விமர்சனம் செய்யலாம். கிண்டல் செய்யலாம். மக்கள் அவரை எப்படி? பார்க்கிறார்கள், என்னவாக பார்க்க விரும்புகிறார்கள் என்பதை காலம் சொல்லும் என தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளராக பார்க்கப்படுபவர் மணி. இவர், தமிழகம் நன்கு அறிந்த மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர், பாரதப் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.விற்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவிப்பதையே தனது கொள்கையாக கொண்டவர். இப்படிப்பட்ட நபர் தான், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை குறைத்து மதிப்பிடாதீர்கள், அவர் சொல்வதை காமெடியாக பார்க்க வேண்டாம். அப்படி பேசுபவர்களுக்கு போதிய புரிதல் இல்லை. அவர், அரசியலில் மிகவும் ஆபத்தான மனிதர் யாரும் அவரை குறைத்து மதிப்பிட வேண்டாம் என யூடியூப் இணையதளமான தமிழ் மிண்ட்டிற்கு அளித்த பேட்டியில் அலறி இருக்கிறார். அதன் லிங்க் இதோ.
இவரின், அலறல் சத்தம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இவர் விடுக்கும் எச்சரிக்கை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.