சொன்ன சொல்லை காப்பாற்றிய பா.ஜ.க தலைவர்!

சொன்ன சொல்லை காப்பாற்றிய பா.ஜ.க தலைவர்!

Share it if you like it

பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு குவியும் பாராட்டு.

தருமபுர ஆதீனத்தின் சார்பில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் பட்டினபிரவேச நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்த ஒரே காரணத்திற்காக தமிழக அரசு தடை விதித்து இருந்தது. இச்சம்பவம், ஹிந்துக்கள் மத்தியில் பெரும் கோவத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அப்பொழுது, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு;  

தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது. ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.. இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதினத்திடம் கோரிக்கை வைப்போம். கோபாலபுர குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கிச் சுமப்பதை போல் அல்ல இது. ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவையின் உள்ள வேறுபாடுகளைக் கூட அறியாதவர் இந்த கோபாலபுர குடும்பத்தார் இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தயாராக இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்து முன்னணி, வி.ஹெச்.பி மற்றும் ஹிந்து அமைப்புகள் தி.மு.க அரசின் ஹிந்து விரோத போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். குறிப்பாக, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த எச்சரிக்கையை அடுத்து, தி.மு.க அரசு பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு உடனே அனுமதி வழங்கியது. இந்நிலையில், நேற்றைய தினம் மிகச் சிறப்பாக நடைபெற்ற பட்டின பிரவேச நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டது குறித்து பா.ஜ.க தலைவர் வெளியிட்ட பதிவு இதோ.

22ஆம் தேதி தருமபுர ஆதினமான ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் பட்டின பிரவேச நிகழ்ச்சியில் நாம் பங்கேற்போம் என்றிருந்தோம். அதே போல் இன்று இந்த வரலாற்று நிகழ்வில் ஒரு சிஷ்யனாகப் பங்கேற்றதை என் பாக்கியமாகக் கருதுகிறேன். தமிழகத்தில் ஆன்மீக மறுமலர்ச்சி. பல்வேறு பணிகளுக்கு இடையில் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய பா.ஜ.க தலைவரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.


Share it if you like it