பிரபல யூ டியூப்பர் மாரிதாஸை கைது செய்ததற்கு பா.ஜ.க தலைவர் அண்ணணாமலை கண்டனம்.
ஆளும் தி.முக அரசு செய்யும் தவறுகளை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி பேசி வருபவர் பிரபல யூ டியூப்பர் மாரிதஸ். தி.மு.க-வின் ஆதரவு பெற்ற ஊடகங்கள், பத்திரிக்கைகள், மக்களிடம் மறைக்கும் செய்திகளின் உண்மை தன்மையை ஆராய்ந்து அதனை வீடியோவாக வெளியிட்டு மக்களிடம் மிகவும் பிரபலமானவர் இவர்.
எதிர்க்கட்சியாக இருந்த பொழுது கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று கூறி வந்த தி.மு.க. ஆளும் கட்சியாக மாறிய பின்பு உதயநிதியையோ, ஸ்டாலினையோ, யாரேனும் விமர்சனம் செய்தால் உடனே கைது செய்து சிறையில் அடைத்து தனது அராஜக போக்கை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில் கிஷோர் கே சாமி, கல்யாண் ராமன், போன்று மாரிதாஸ் அவர்களை நேற்றைய தினம் அவரின் வீட்டிற்கு சென்று கைது செய்து உள்ளது.
மாரிதாஸ் கைதினை தொடர்ந்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தி.மு.க அரசின் மமதை போக்கினை கண்டித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தனது எண்ணத்தை பதிவு செய்து உள்ளார்.
தன்னுடைய அதிகார மமதையினால் அறிவாலயம் விமர்சனம் செய்பவர்களுக்கு விலங்கு பூட்டுகிறது. திமுக அரசால் பழிவாங்கும் நோக்கில் கைது செய்யப்பட்ட பா.ஜ.க உறுப்பினர் திரு. கல்யாண் ராமன் மற்றும் பிற தேசியவாதிகளுக்கு சட்டப்பூர்வ தீர்வுகளை, உதவிகளை தமிழக பாஜக செய்து வருகிறது.
