காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தியின் வரம்பு மீறிய பேச்சால் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை ஆண்ட காங்கிரஸ் கட்சி, ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கையை இழந்து இன்று ஒரு சில மாநிலங்களிலேயே ஆட்சியை நடத்தி வருகிறது. ராகுல் காந்தியின் செயல்பாடுகள், பேச்சுகள் மக்கள் மத்தியில் வெறுப்பை உருவாக்கி வருவதன் காரணமாக, அக்கட்சியைச் சேர்ந்த பல மூத்த தலைவர்கள், ராகுல் மீது அதிருப்தி ஏற்பட்டு மாற்றுக் கட்சியை நோக்கி படையெடுப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரத் தலைவரை நியமனம் செய்யுங்கள் என்று, காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் சோனியா காந்திக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். இந்த அவலநிலைக்கு அக்கட்சி சென்று விட்டதை அரசியலை உன்னிப்பாக கவனிக்கும் அறிவார்ந்த மக்கள் நன்கு அறிவர்.
மேலும், தி.மு.க. இளைஞரணி செயலாளாரும், தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனுமாகிய உதயநிதி ஸ்டாலினை தமிழகத்தின் துணை முதல்வராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் முதல்வருக்கு சமீபத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு, நாம் ஆட்சிக்கு வர ஆலோசனை கூறுவார் என்று பார்த்தால் உதயநிதி துணை முதல்வராக இவர் ஏன்? குரல் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
அதேபோல, பா.ஜ.க. ஒருபோதும் தமிழ்நாட்டை ஆள முடியாது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். இதுதான் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் நமது கட்சி ஆட்சி அமைக்க என்ன வழி என்பதை ஆராய்வதை விட்டு விட்டு, எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது என்று கதறுகிறாரே? அப்படியானால், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையைப் பார்த்து பதறுகிறாரா ராகுல் காந்தி என்று மறைமுகமாக விமர்சனம் செய்து வருகிறார்கள். நெட்டிசன்களும் ராகுலை வறுத்தெடுத்து வருகின்றனர்.