தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்கள் சந்தித்த போது, அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாமன்னர் பூலித்தேவரின் பிறந்த நாளான இன்று சென்னை பசும்பொன் தேவர் அரங்கத்தில் உள்ள பூலித்தேவர் அவர்களின் திருவுருவப்படத்திற்கும் மரியாதை செலுத்தி விட்டு பின்பு பத்திரிகையாளர்களை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சந்தித்தார். இதையடுத்து, அவர்கள் எழுப்பிய கேள்வி அவர் அளித்த பதில் இதோ.
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்வார் என எதிர்ப்பார்த்து இருந்தோம். ஆனால், அவர் கூறவில்லை. தமிழகத்தில், முதன் முதலாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விடுமுறை வழங்கிய அரசு தி.மு.க அரசு தான். அண்ணாதுரை முதல்வராக பதவியேற்ற பிறகு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விடுமுறையை அறிவித்தார். அண்ணா வகுத்து கொடுத்த பாதையில் செல்வதாக கூறிக் கொள்ளும் தமிழக முதல்வர் ஸ்டாலின். இன்று அந்த பாதையில் இருந்து விலகி சென்று இருக்கிறார் என்பதற்கு, விநாயகர் சதுர்த்தி விழாவே சிறந்த உதராணம் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.
மேலும், விவரங்களுக்கு மீடியான் யூ டியூப் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.