இளைஞர்களின் எதிர்காலம் யார் கையில்:  மக்கள் கருத்து என்ன?

இளைஞர்களின் எதிர்காலம் யார் கையில்: மக்கள் கருத்து என்ன?

Share it if you like it

தமிழக இளைஞர்களை அதிகம் கவர்ந்த தலைவர் அண்ணாமலையா? அல்லது உதயநிதியா? என மக்கள் தற்போது பேச ஆரம்பித்து இருக்கின்றனர்.

கர்நாடக சிங்கம், என்று அம்மாநில மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் அண்ணாமலை. இவர், தனது காவல்துறை பணியை உதறி தள்ளிவிட்டு பொதுவாழ்க்கைக்கு வந்தவர். தமிழக மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றவர். இன்று, தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறார். இவரது, தலைமையின் கீழ் அக்கட்சி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது என்பதே நிதர்சனம்.

தமிழகத்தில், நாளுக்கு நாள் அண்ணாமலைக்கு ஆதரவு பெருகி வருகிறது. இவரது, வளர்ச்சி உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்காலத்தில், கடும் சவாலாக மாற அதிக வாய்ப்பு உள்ளது என பல்வேறு அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது, தி.மு.க.வினர் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து, பா.ஜ.க.வின் வளர்ச்சியை தடுக்கும் பொருட்டு, தி.மு.க.வின் ஆசி பெற்ற பத்திரிகையாளர்கள், நெறியாளர்கள் மற்றும் யூ டியூப்பர்ஸ் அண்ணாமலை குறித்து தொடர்ந்து அவதூறு செய்தியினை பரப்பி வருகின்றனர். இருப்பினும், இவர்களது பொய் குற்றச்சாட்டுகளை மக்கள் நம்ப தயாராக இல்லை என்பதே திண்ணம்.

இதனிடையே, பிரபல இணையதள ஊடகமான கலாட்டா வாய்ஸ், பிளாட்பாரத்தில் கட்சி கொடி மற்றும் கட்சி தலைவர்களின் புகைப்படம், பேஜ் போன்றவற்றை விற்பனை செய்யும் முதியவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேட்டி கண்டது. அப்போது, அந்த முதியவர் கூறியதாவது;

அ.தி.மு.க தான் நம்பர் ஒன் அம்மா இருக்கும் வரை அதன்பிறகு, வியாபாரம் கொஞ்சம் டல் அடிக்க ஆரம்பித்தது. விஜயகாந்த் படமும் நன்றாக விற்பனை ஆனது. இப்பொழுது, பிஜேபி தான் சூப்பர். அண்ணாமலை கார்ட் தான் நன்றாக விற்பனை ஆகிறது. தி.மு.க மற்றும் உதயநிதி ஸ்டாலின் கார்டு குறித்து நெறியாளர் கேள்வி ஒன்றினை முன்வைக்க. அந்த கார்டு எல்லாம் இருக்கு அது எல்லாம் போகாது என்று கூறியிருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், எஃப்.சி.எஸ் என்ற இணையதள ஊடகம் அண்ணாமலை மற்றும் உதயநிதியை முன்வைத்து மக்களிடம் கேள்வி கேட்டன. அப்போது, பெரும்பாலானவர்கள் அண்ணாமலைக்கே தங்களது ஆதரவினை தெரிவித்து இருந்தனர். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Image
Image
Image

Share it if you like it