அண்ணாமலையை விமர்சனம் செய்து விட்டு, காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்று காமெடி செய்த – இளங்கோவன்..!

அண்ணாமலையை விமர்சனம் செய்து விட்டு, காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்று காமெடி செய்த – இளங்கோவன்..!

Share it if you like it

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை காங்கிரஸ் கட்சியின் மூத்த ஆபாச பேச்சாளர் இளங்கோவன் மீண்டும் விமர்சனம்.

பா.ஜ.க-வின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல், தி.மு.க, வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்கள், உட்பட பலர் மத்திய அரசு, பாரதப் பிரதமர் மோடி, அண்ணாமலையை, விமர்சனம் செய்து வருகின்றனர். அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் தமிழக பா.ஜ.க தலைவர் கட்சியின் வளர்ச்சிக்காக மிக கடுமையாக உழைத்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த ஆபாச பேச்சாளர்களில் ஒருவரான இ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் சமீபத்தில் அண்ணாமலையை ஒருமையில் விமர்சனம் செய்து பேசிய காணொளி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் மீண்டும் அண்ணாமலையில் நேர்மை குறித்து மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்து இளங்கோவன் பேசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. விடியல் ஆட்சியில் நிகழும் அட்டூழியங்கள், அடாவடிகள், குறித்து எல்லாம் பேசாமல் அண்ணாமலையை மட்டும் விமர்சனம் செய்வதன் மூலம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு எந்த அளவு பா.ஜ.க தலைவர் தடையாக இருக்கிறார் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு சமீபத்தில் டுவிட்டரில் பதிலடி கொடுத்தது போல் பிரபல ஆபாச பேச்சாளர் இளங்கோவன் அவர்களுக்கும் அண்ணாமலை மரண பதிலடி கொடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it