புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை !

புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை !

Share it if you like it

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விஜய் விரைவில், அரசியலுக்கு வர உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் தனது கட்சியின் பெயரை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என்று அவரது கட்சிக்கு பெயரிட்டுள்ளார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அண்ணாமலை X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :

தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் திரு.விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


Share it if you like it