பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை !

பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை !

Share it if you like it

தமிழ்நாட்டில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து 7 ஆயிரத்து 534 பள்ளிகளை சேர்ந்த சுமார் 7 லட்சத்து 22 ஆயிரம் 200 மாணவ, மாணவிகள் மாணவர்கள் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் 3,300 க்கும் மேற்பட்ட மையங்களில் மாணவர்கள் தேர்வெழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. வினாத்தாள் மற்றும் விடைத்தாள் பாதுகாப்பாக கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேர்வு அறைகளில் மாணவர்கள் காப்பி அடித்தல், விடைத்தாள் மாற்றுவது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்களை பிடிக்க 3,200 பறக்கும் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் தேர்வறைக்குள் மாணவர்கள் செல்போன், மின்சாதானங்கள் உள்ளிட்டவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. இதுதொடர்பாக அண்ணாமலை X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது : இன்று பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு, உங்கள் பள்ளிக் கல்வியின் இத்தனை ஆண்டுகள் கடின உழைப்புக்கு நற்பலன்கள் கொடுக்கவிருக்கும் தேர்வு. நீங்கள் ஒவ்வொருவருமே தனித்திறன் படைத்தவர்கள். அனைவருக்கும் சிறந்ததொரு எதிர்காலம் உருவாக்குவதாக, இந்தத் தேர்வுகள் அமையட்டும்.

மாணவச் செல்வங்கள், இந்தத் தேர்வுகளின் மூலம், உயர்கல்வியில் தங்களுக்கு விருப்பமான துறைகளைத் தேர்ந்தெடுத்து, பல சாதனைகள் படைக்க எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


Share it if you like it