பிரதமர் நரேந்திர மோடி டான்ஸ் ஆடுவது போல வீடியோ மீம் ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவிவந்தது. இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த நாத்திகவாதியான கிருஷ்ணா என்பவர் இந்த பிரதமர் மோடி டான்ஸ் ஆடும் AI மூலம் உருவாக்கப்பட்ட காணொளியை சமூக வலைதளத்தில் பகிர்ந்து அந்த பதிவின் மேல் இந்த காணொளியை பதிவிட்டதனால் சர்வாதிகாரியான மோடி அரசு என்னை கைது செய்யாது என்று நினைக்கிறேன். இவ்வாறு பதிவிட்டார். இந்த காணொளியானது வைரலானது.
இதனை அடுத்து பிரதமர் மோடி கிருஷ்ணா பகிர்ந்த அதே காணொளியை பிரதமர் மோடி,தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, அந்த காணொளியின் மேல் “உங்கள் அனைவரையும் போலவே நானும் நடனமாடுவதைப் பார்த்து மகிழ்ந்தேன். உச்சக்கட்ட வாக்கெடுப்பு சீசனில் இத்தகைய கிரியேட்டிவ் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது!” என்று கூறி, சிரிப்பு எமோஜிகளை பதிவிட்டு நாத்திகர் கிருஷ்ணாவுக்கு சிறந்த பதிலடி கொடுத்தார்.
இதேபோல் சமீபத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் டான்ஸ் ஆடுவது போல் வீடியோ மீம் ஒன்று வைரலாக பரவியது. இந்த காணொளியை பார்த்து ஆத்திரமடைந்த மம்தா பானர்ஜி, கொல்கத்தாவின் சைபர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு AI-உருவாக்கிய மீம் தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டு, அந்த காணொளியை உடனடியாக நீக்குமாறும், இந்த காணொளியை பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மேலும் இதுபோன்ற பதிவுகளை பகிர வேண்டாம் எனவும் கட்டளை இட்டுள்ளார். இதனை அடுத்து கொல்கத்தா காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு நேற்று மம்தா காணொளி வெளியிட்ட சமூக ஊடக பயனர்கள் மீது “தாக்குதல், தீங்கிழைக்கும் மற்றும் தூண்டுதல்” ஆகிய பிரிவுகளின் கீழ் வீடியோவை வெளியிட்டதற்காக நோட்டீஸ் அனுப்பினர்.
மேலும் சமூக வலைதளத்தில் மம்தா காணொளி வெளியிட்டவருக்கு, பெயர் மற்றும் இருப்பிடம் உட்பட உங்கள் அடையாளத்தை உடனடியாக வெளியிடுமாறு உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோரப்பட்ட தகவல் வெளிப்படுத்தப்படவில்லை என்றால், நீங்கள் சட்ட நடவடிக்கைக்கு நாங்கள் பொறுப்பாவீர்கள்/42 CrPC. இவ்வாறு சைபர் காவல் நிலைய அதிகாரிகள் பதிவிட்டுள்ளனர்.
காவல்துறையினரின் நோட்டீஸிற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளவாசிகள், “சாமானியனை மிரட்டும் காவல்துறைக்கு இது என்ன வழி?, மீம்ஸ் வீடியோ தயாரிப்பாளரை இப்படி மிரட்டுவார்களா காவல்துறை?, கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு என்பதை காவல்துறை மறந்துவிடக் கூடாது. இதுபோன்ற மிரட்டல்களுக்கு யாரும் பயப்படப் போவதில்லை. இதைப் போய் மம்தா பானர்ஜியிடம் சொல்லுங்கள்” என்று ஒரு சமூக ஊடகப் பயனர் எழுதினார்.
போலீஸ் நோட்டீசுக்கு பதிலளித்து, “மம்தா பானர்ஜிக்கு மீம்ஸ் போட்டதற்காகத்தான் கொல்கத்தா காவல்துறை நோட்டீஸ் கொடுக்கிறது. இந்தியாவில் பாஜக ஆட்சியில் ஜனநாயகம் இல்லை என்று சொல்பவர்கள் சில சமயங்களில் மேற்கு வங்கத்திற்குச் செல்ல வேண்டும். பேச்சு சுதந்திரம் அதிகம். வங்காளத்தில் என்று மற்றொரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.
கொல்கத்தாவின் சைபர் காவல் நிலைய அதிகாரிகளின் இந்த செயல்களை கிண்டலடிக்கும் வகையில் பதிலடி தரும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் பதிவில், கொல்கத்தா காவல்துறை அதிகாரிகளே உங்கள் தகவலுக்கு,
பிரிவுகள் தொடர்பாக உங்களுக்கு சந்தேகம் இருந்தால், தமிழ்நாடு காவல்துறையைத் தொடர்புகொள்ளவும். என்று பதிவிட்டுள்ளார். அதாவது தமிழ்நாட்டில் தான் ஆளுங்கட்சியான திமுக அரசை விமர்சித்தால் உடனடியாக கைது செய்வார்கள். மேலும் வயிற்று பிழைப்புக்காகக் பஞ்சுமிட்டாய் விற்பவர்கள், ரோட்டில் முட்டையை உடைத்து ஆம்லேட் போடுபவர்களை, கிளி ஜோசியம் சொல்பர்களை இவர்களை தான் பெரிய குற்றவாளிகளாக கருதி தமிழக காவல்துறையினர் கைது செய்வார்கள். இந்த சம்பவத்தை கருத்தில் கொண்டே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொல்கத்தா போலீசை கிண்டலடித்துள்ளார்.