தமிழக அரசு வழங்கிய ’மஞ்சள் பை’ திட்டத்தில் 130 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டை சுமத்தி இருப்பது தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பிளாஸ்டிக் பொருட்களின் ஆதிக்கத்தை முற்றிலும் குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மீண்டும் மஞ்சள் பையை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக, தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் ’மஞ்சள் பையை’ அறிமுகப்படுத்தும் விழாவினை தொடங்கி வைத்தார். இதற்கு, பல்வேறு ஊடகங்கள், தி.மு.க.வின் ஆசிபெற்ற பியூஸ் மானுஸ், பூ உலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் பல சூற்றுச்சூழல் போராளிகள் தமிழக அரசுக்கு தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து இருந்தனர்.
மேலும், ஜெர்மன் நாட்டு அமைப்புடன் இணைந்து “மஞ்சள் பை” பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று தி.மு.க. அரசு பெருமையோடு அறிவித்து இருந்தது. அந்த வகையில், பொங்கல் பரிசு தொகுப்பை ’மஞ்சள் பையில்’ தான் தமிழக அரசு வழங்கும் என்று அனைத்துத் தரப்பு மக்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், சுற்றுசூழலுக்கு தீங்கிழைக்கும் வகையில், க்ரீஸ் வெல்லத்தை பிளாஸ்டி பையில் வழங்கி மக்களின் கோவத்தை சம்பாரித்தது தி.மு.க. அரசு. இந்த நிலையில்தான், தமிழக அரசு வழங்கிய ’மஞ்சள் பை’ திட்டத்தில் 130 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார். இதுதான் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. ஊழல் பண்ணாம இருந்தாத்தானே பாஸ் ஆச்சரியம்!