பா.ஜ.க. தலைவரை எவ்வளவோ இழிவுப்படுத்தி இருக்கிறேன்: ஆனாலும் எனக்கு அவர் உதவி செய்ய நினைத்தார் -சவுக்கு சங்கர் உருக்கம்!

பா.ஜ.க. தலைவரை எவ்வளவோ இழிவுப்படுத்தி இருக்கிறேன்: ஆனாலும் எனக்கு அவர் உதவி செய்ய நினைத்தார் -சவுக்கு சங்கர் உருக்கம்!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறேன். எனினும் அவர் எனக்கு உதவி செய்ய முன் வந்தார் என சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

ஆதன் இணையதள ஊடக நெறியாளர் மாதேஷ், பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரை அண்மையில் பேட்டி கண்டார். அப்போது, அவர் கூறியதாவது ;

நான் பா.ஜ.க.வை மிக கடுமையாக விமர்சனம் செய்தவன் என்பது மக்களுக்கும் தெரியும் அக்கட்சியை சார்ந்தவர்களுக்கும் தெரியும். இதையெல்லாம், பார்த்து விட்டு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடலூர் சிறையில் இருந்த எனக்கு உதவி செய்ய முன்வந்தார். அவருக்கு, ஏதேனும் உதவி தேவைப்பட்டால் செய்து கொடுங்கள் என்று தனது கட்சி காரர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.

வெளிப்படையாக நாம் அவருக்கு உதவி செய்ய முடியாது. வழக்கறிஞர் உதவி அவருக்கு தேவைப்பட்டால் செய்து கொடுங்கள் என்று கூறினார். பா.ஜ.க.வை நான் பாஸிட் கட்சி என்றும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானவர்கள் என்றும் கூறியிருக்கிறேன். நான் விமர்சனம் செய்த கட்சிக்கு கூட குறைந்தபட்ச தார்மீகம் இருக்கிறது. அவர்கள் கூட கருத்து சுதந்திரம் முக்கியம் என்று கருதுகிறார்கள்.

பிரதமர் மோடியை, அமித்ஷாவை, ஏன்? அண்ணாமலையை கூட நான் மிக கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறேன். ஆனால், அது குறித்து அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கருத்து சுதந்திரத்தின் காவலர்கள் என்று சொல்லி கொள்ளும் கட்சி தான் நாட்டில் கருத்து சுதந்திரம் இருக்க கூடாது என்று நினைக்கிறார்கள் என்று தெரிவித்து இருக்கிறார்.


Share it if you like it