உலகையே முடக்கி போட்டுள்ளது கொரோனா வைரஸ். இதற்க்கு ஆரம்ப புள்ளி எங்கே என்று அனைத்து நாடுகளும் பல கோணங்களில் விசாரித்து வருகிறது. இது வரை அவர்களுக்கு கிடைத்த ஆதாரங்களை வைத்து பார்க்கையில் சந்தேக ரேகை பாய்வது என்னவோ சீனாவின் வூஹான் வைரஸ் ஆய்வு மையத்தை நோக்கி தான். சீனா கம்யூனிஸ்டுகள் அதை மறுத்தாலும், இந்திய கம்யூனிஸ்டுகள் அதற்க்கு முட்டு கொடுத்தாலும் ஆதாரங்கள் என்னவோ இது திட்டமிட்டு பரப்பிய நோய் என்றுதான் கூறுகிறது. அதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக மேலும் சில ஆதாரங்கள் கசிந்துள்ளது.
அமெரிக்க குடியரசு கட்சி இது குறித்து கூறி உள்ளதாவது : வூஹான் ஆய்வுக் கூடத்தில் மனிதரை தாக்கும் வகையில் ஒரு கொடூர வைரசை உருவாக்கி அது வேறு யாருக்கும் தெரியாதபடி மறைப்பதற்கான வேலைகளும் நடந்ததற்கான எச்சங்கள் இருக்கின்றன. வூஹான் ஆய்வகத்தில் அபாயகரமான கழிவுகளை பராமரிக்கும் பிரிவை சீரமைக்க சீன அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. இதற்காக, 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும்படி ஆய்வக நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது.
ஆய்வகம் செயல்பாட்டுக்கு வந்து இரண்டு ஆண்டுகளே ஆகாத நிலையில் அதற்குள் ஏன் அபாயகரமான கழிவுகளை பராமரிக்கும் பிரிவை சீரமைக்க வேண்டும். அதுவும் 11 கோடி ருபாய் எதற்கு என்பது சாமானியருக்கும் சந்தேகத்தைகிளப்பும் வகையில் உள்ளது.
இங்கு தமிழகத்தில் இருந்து கொண்டு சீனாவிற்கு ஆதரவாக கருத்துக்களை பரப்பி வரும் இந்திய கம்யூனிஸ்டுகள் இது குறித்தெல்லாம் வாய் திறப்பார்களா..? என்று பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.