இ-ருபி திட்டம், 75வது சுதந்திர ஆண்டில் அறிமுகப்படுத்தியத்தில் பெருமகிழ்ச்சி – பிரதமர் மோடி

இ-ருபி திட்டம், 75வது சுதந்திர ஆண்டில் அறிமுகப்படுத்தியத்தில் பெருமகிழ்ச்சி – பிரதமர் மோடி

Share it if you like it

இ-ருபி என்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவையை நேற்று பிரதமர் தொடங்கி வைத்தார்.

இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் இ-ருபி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான ரொக்கமில்லாமல் மற்றும் நேரடி தொடர்பில்லாத முறையாகும்.இதில் qr code அல்லது குருந்செய்தி மூலம் மின்னணு ரசீதாக இயங்கும் நடைமுறை, இந்த மின்னணு ரசீது நேரடியாக பயனாளிகளின் கைபேசிக்கு அனுப்பப்படும் என கூறப்படுகிறது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு செயலிகள் நெட் பேங்கிங் முறைகளை பயன்படுத்தாமல் சேவையளிப்பவருக்கு பணம் செலுத்தலாம். சேவை வழங்குவோர் மற்றும் சேவை பெறுபவர்கள் இடையே எளிமையான முறையில் பணம் பரிவர்த்தனை நடைபெற இ-ருபி பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனாளர்கள் முன்கூட்டியே பணத்தை செலுத்திவிட்டால் அவர்களது கைபேசிக்கு கூப்பன்கள் அனுப்பப்படும் எனவும் கூப்பன் விவரங்களை அடங்கே குறுந்செய்தியை சேவை பெறும் இடத்தில் காண்பித்தால் சேவைக்கு ஏற்ப பணம் பிடித்தம் செய்து கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ரீபெய்டு முறையாக இருப்பதால் எந்த இடைத்தரகர் தலையீடு இன்றி சேவை அளிப்பவருக்கு குறித்த நேரத்தில் பணம் செலுத்தபடுவதை உறுதிசெய்கிறது.

இ-ருபி வசதியை தாய் சேய் நலத்திட்டங்கள், டி.பி ஒழிப்பு திட்டங்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டம், உர மானியம் போன்ற திட்டங்களில் பயன்படுத்த முடியும் ஊழியர்களின் நலன் மற்றும் சமூக பொறுப்பு திட்டங்களின் ஒரு பகுதியாகவும் தனியார் நிறுவனங்கள் இந்த டிஜிட்டல் ரசீதை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நிதி சேவைகள் துறை, சுகாதார அமைச்சகம், தேசிய சுகாதார ஆணையத்துடன் இணைந்து தேசிய பணவர்தனை கழகம் உருவாகியுள்ளது. இந்த சிறப்பான திட்டத்தை
75 வது சுதந்திர ஆண்டில் அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


Share it if you like it