கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட கட்சியாக தி.மு.க தன்னை காட்டி கொண்டாலும். சிறுபான்மை மக்களை ஏமாற்றியும் பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து வரும் கட்சியாக இன்று வரை தி.மு.க இருந்து வருகிறது என்பது நிதர்சனம்.
இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்கள் பண்டிகைகளில் கலந்து கொண்டு தேவையில்லாமல் ஹிந்து மதத்தை இழிவுப்படுத்துவது. ஹிந்து வழிபாட்டு முறை அவர்களின் கடவுளை மிக கடுமையாக விமர்சனம் செய்வது என்று ஸ்டாலின் உட்பட அதன் கூட்டணி கட்சியினர் இன்று வரை பேசி வரும் நிலையில்.
இந்தியாவிலேயே ஹிந்துக்கள் மீது அதிக வன்மத்தை வெளிப்படுத்தும் மாநிலம் எது என்று அண்மையில் ஓர் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் 3,313 நபர்கள் வாக்களித்து உள்ளனர். இந்தியாவிலேயே ஹிந்து விரோத மாநிலமாக தமிழகம் தான் முதன்மையான இடத்தில் உள்ளது என்று 56.1% சதவீதத்தினர் வாக்களித்து. தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Which govt is most anti-Hindu
— IndianDa – HINDU 🇮🇳 (@jkgche) August 27, 2021