டாக்டர். ராஜ் சரண் ஷாஹி மற்றும் திரு. யாக்வால்கியா சுக்லா ஆகியோர் மீண்டும் ஏபிவிபியின் தேசிய தலைவர் மற்றும் தேசிய பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2023 ஆம் ஆண்டிற்கான, நாட்டின் முன்னணி மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் தேசிய தலைவராக டாக்டர்.ராஜ் சரண் ஷாஹி (உத்திரபிரதேசம்) மற்றும் தேசிய பொது செயலாளராக திரு.யாக்வால்கா சுக்லா (பீகார்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த அறிவிப்பு மும்பையில் உள்ள ஏபிவிபியின் மத்திய அலுவலகத்தில் இருந்து நேற்று ( 23-11-2023) வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக ஏபிவிபியின் தேர்தல் அதிகாரி, பேராசிரியர் சி.ந.படேல், இரு பதவிகளின் பதவிக்காலம், ஒரு வருடம் இருக்கும் என தெரிவித்து இருக்கிறார். 2023 டிசம்பர் 7, 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தில்லியில் நடைபெற உள்ள ஏபிவிபியின் 9வது தேசிய மாநாட்டின் போது, இரு நிர்வாகிகளும் தங்கள் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள். டாக்டர். ராஜ்சரண் ஷாஹி உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர், முனைவர் பட்டம் முடித்தார். தற்போது லக்னோவில் உள்ள பாபா சாகேப் பீம் ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில், இணைப் பேராசிரியராக உள்ளார், ஆறு நூல்களை எழுதி பதிப்பித்துள்ளார், அவரது 109 ஆய்வுக் கட்டுரைகள் தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சி இதழ்கள் மற்றும் கருத்தரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளன. தினசரி நாளிதழ்களில் கல்வி தொடர்பான பாடங்களில் இவரது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சிம்லாவில் உள்ள புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ் ஸ்டடிஸில் அசோசியட்டாக இருந்துள்ளார்.
2017ஆம் ஆண்டில், உத்திர பிரதேச முதலமைச்சரால் சிறந்த ஆசிரியருக்கான யோகி ராஜ் பாபா கம்பீர் நாத் தங்க பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது. உத்திர பிரதேச மாநிலத்தின் தேசிய கல்வி கொள்கை மற்றும் அமலாக்க குழு உட்பட பல்வேறு முக்கிய கல்வி குழுக்களில் உறுப்பினராக உள்ளார். கல்வி மற்றும் சமூக பிரச்சினைகளில் ஆழ்ந்த சிந்தனையாளரான இவர், உத்திர பிரதேசத்தில் ஏபிவிபியின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றுகிறார். 1989ஆம் ஆண்டு முதல் அவர் ஏபிவிபியில் இணைந்து இன்று வரை செயலாற்றி வருகிறார். ஒரு ஆசிரியர் மற்றும் காரியகர்த்தாவாக, இதுவரை கோரக்பூர் மாநில தலைவர் மற்றும் கோரக்ஷ் பிரான்ட் தலைவர், தேசிய துணைத் தலைவர் போன்ற பொறுப்புகளை வகித்துள்ளார். 2023-24 அமர்வுக்கு ஏபிவிபியின் தேசிய தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் லக்னோவில் வசிக்கிறார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தை சேர்ந்தவர், திரு யாக்வால்க்யா சுக்லா. இவர் ராஞ்சி பல்கலைக்கழகத்தில் புவியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். ஜார்க்கண்ட்டின் பலமு பிரிவின் கோர்பா பழங்குடியினரின் கலாச்சார புவியியல் பற்றி ஆராய்ச்சி செய்து உள்ளார். நிலம்பர்-பிதாம்பர் பல்கலைக்கழகத்தில் புவியியலில் முதுகலைப் பட்டத்திற்கான தங்கப் பதக்கம் பெற்றார். அவர் கர்வாவிலுள்ள ஸ்ரீ ஜக்ஜித் சிங் நாம்தாரி கல்லூரியின் மாணவர் சங்கத்தின் தலைவராகவும், ராஞ்சி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2018ஆம் ஆண்டு இந்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கைக்கான இந்திய இளைஞர் குழுவில் அவர் நம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். பள்ளி வாழ்க்கையிலிருந்து வித்யார்த்தி பரிஷத்துடன் தொடர்பு கொண்டு 2009 முதல் முழு நேர செயல்பாட்டாளராகப் பணியாற்றி வருகிறார். ஜூடன் போன்ற பல்வேறு வெற்றிகரமான சோதனைகள் மூலமாகவும், பழங்குடியின மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியதன் மூலமாகவும், ஜார்கண்ட் இளைஞர்களை தவறாக வழி நடத்த முயன்ற பல்வேறு சதிகளை முறியடித்தார். ராஞ்சி மகாநகர் அமைப்புச் செயலாளர், ஜார்கண்ட் மாநில அமைப்புச் செயலாளர், மத்திய செயற்குழு உறுப்பினர். பீகார் மண்டலத்தின் மண்டல இணை அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும், வரவிருக்கும் 2023- 24 அமர்வுக்கு, அவர் தேசிய பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையகம் பாட்னாவில் உள்ளது.