அண்ணாமலை மனைவியை இழுப்பதா… ஓட்டை பல்லு இருக்காது… தி.மு.க. நிர்வாகியை விளாசிய ராணுவ வீரர்!

அண்ணாமலை மனைவியை இழுப்பதா… ஓட்டை பல்லு இருக்காது… தி.மு.க. நிர்வாகியை விளாசிய ராணுவ வீரர்!

Share it if you like it

அண்ணாமலையின் மனைவியை பொதுவெளியில் இழுத்துப் பேசுவதா… மரியாதையா இல்லன்னா அந்த ஓட்டைப் பல்லும் இருக்காது ஜாக்கிரதை என்று தி.மு.க. நிர்வாகியை விளாசித் தள்ளி இருக்கிறார் ராணுவ வீரர் குருமூர்த்தி.

விருதுநகர்‌ மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள கீழராஜகுலராமன் பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. சி.ஆர்.பி.எஃப் வீரராக பணியாற்றி வருகிறார். தமிழக அரசியல் குறித்தும், தேசத்துக்கு விரோதமாக பேசுபவர்கள் குறித்தும், அவ்வப்போது வீடியோ வெளியிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில், ஸ்டாலின், உதயநிதி, திருமாவளவன் உள்ளிட்ட பலரை கண்டித்தும் வீடியோ வெளியிட்டிருக்கிறார். இவர்தான் தற்போது புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

அதாவது, அமலைக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, சிறைக் கைதியாக இருக்கும் செந்தில்பாலாஜியை, அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி, நேற்று முன்தினம் இரவு உத்தரவு பிறப்பித்திருந்தார் கவர்னர் ஆர்.என்.ரவி. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கும் கடிதம் எழுதி இருந்தார். இந்த விவகாரம் தி.மு.க.வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. செந்தில்பாலாஜி ஒரு மோசடி பேர்வழி என்பது தெரிந்தும், அவருக்கு வக்காலத்து வாங்கி வருகின்றனர்.

அந்த வகையில், தி.மு.க. ஐ.டி. விங்கின் மாநில துணைச் செயலாளர் மதுரையைச் சேர்ந்த பாலா என்கிற பாலமுருகன், கவர்னரை கண்டித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அப்பதிவில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மனைவி, கவர்னர் ஆர்.என்.ரவியிடம் போன் செய்து பேசியதாக குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இதைக் கேட்டு ஆவேசமடைந்த ராணுவ வீரர் குருமூர்த்தி, பாலமுருகனுக்கு பதிலடி கொடுத்த வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில், அண்ணாமலை மனைவிக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. அப்படி இருக்க, அவரது மனைவியை இழுத்துப் பேச என்ன காரணம்? இதுபோன்ற தகாத முறையில் பேசினால், அந்த ஓட்டைப் பல்லும் இருக்காது, (பாலமுருகனுக்கு முன்புற பற்களில் ஒரு பல் பாதிதான் இருக்கும்) தட்டிக் கையில் கொடுத்துவிடுவார்கள், ஜாக்கிரதை என்று கடுமையாக எச்சரித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தி.மு.க. நிர்வாகி பாலமுருகனை, ராணுவ வீரர் குருமூர்த்தி கழுவிக் கழுவி ஊற்றும் வீடியோயை காண கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்….


Share it if you like it