ராணுவ வீரர்கள் அவமதிப்பு: டாக்டர்  சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு கூட்டம்..!

ராணுவ வீரர்கள் அவமதிப்பு: டாக்டர் சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு கூட்டம்..!

Share it if you like it

முன்னாள், இன்னாள் முப்படை ராணுவ வீரர்கள் கூட்டமைப்பு சார்பாக லைன் டாக்டர் கே. சுரேஷ்பாபு தலைமையில் கவனயீர்ப்பு இன்று கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொறுப்பாளர்கள் மற்றும் வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.

இந்த கவன ஈர்ப்பு கூட்டத்தில் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர் வேலை வாய்ப்பில் முன்னுரிமை உயர் கல்வியில் இட ஒதுக்கீடு. முன்னாள் ராணுவ வீரர்கள் அரசாங்க அலுவலகங்களுக்கு செல்லும் பொழுது, உரிய மரியாதையின்றி பேசுவது, அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதை முற்றிலும் தடுப்பது மற்றும் சுங்கவரி கட்டணம், வீட்டு வரி கட்டணம், ரத்து செய்வது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கே.வி. ஸ்கூல் அமைக்கக்கோரி இந்த கவன ஈர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜு பொருளாளர் கே சிவகுமார் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர் ஜம்புலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Share it if you like it