கடந்த 9 ஆண்டுகளில் ஏழை மக்களின் சுமார் 26,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டிருக்கின்றன – அமித்ஷா !

கடந்த 9 ஆண்டுகளில் ஏழை மக்களின் சுமார் 26,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டிருக்கின்றன – அமித்ஷா !

Share it if you like it

புதுடெல்லியில் முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்களின் (பி.ஏ.சி.எஸ்.) தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு, பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி கேந்திராவின் சிறந்த செயல்பாட்டிற்கான ஸ்டோர் குறியீடுகளை 5 மாநிலங்களில் உள்ள பி.ஏ.சி.எஸ். நிறுவனங்களுக்கு வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அமித்ஷா, “இதுவரை அரசாங்கத்தின் ஜன் ஔஷதி கேந்திராக்கள் நகர்ப்புற ஏழைகளுக்கு பயனளிக்கும் வகையில் பெரும்பாலும் நகரங்களில் திறக்கப்பட்டன. இதன் மூலம் 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையிலான மருந்துகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. அந்த வகையில், கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களின் சுமார் 26,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது, இந்த நன்மை கிராமப்புற ஏழைகளுக்கும் கிடைக்கும் வகையில், ஜன் ஔஷதி கேந்திராக்கள் கிராமப் புறங்களிலும் விரிவுபடுத்தப்படுகிறது. கடந்த 6 மாதங்களில் பி.ஏ.சி.எஸ்.லிருந்து 4,470 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 2,373 பி.ஏ.சி.எஸ்.களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இவற்றில் 241 ஜன் ஔஷதி கேந்திராக்கள் இயக்கத் தொடங்கி இருக்கின்றன.

கிராமப்புறங்களில் இந்த விற்பனை நிலையங்கள் திறக்கப்படுவதால், மக்கள் பொது மருந்துகளை மலிவு விலையில் வாங்கலாம். உதாரணமாக, வெளிச்சந்தையில் 2,250 ரூபாய்க்கு விற்கப்படும் புற்றுநோய் மருந்துகள், வெறும் 250 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. பெண்களும்கூட, இந்த மையங்களில் 1 ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின்களை வாங்கலாம்.

மேலும், மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத், மிஷன் இந்திரதனுஷ், ஜல் ஜீவன் மிஷன், டிஜிட்டல் ஹெல்த், மலேரியா ஒழிப்பு மிஷன், டிபி முக்த் பாரத் ஆகிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்த முயற்சிகள் நாட்டின் சுகாதாரத்தை பெருமளவில் மாற்றியுள்ளன” என்றார்.

தொடர்ந்து பேசிய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “கடந்த சில மாதங்களில் மட்டும் 4,000-க்கும் மேற்பட்ட பி.ஏ.சி.எஸ்.கள் ஆன்லைனில் பதிவு செய்தன. இவற்றில் 2,300-க்கும் மேற்பட்ட சங்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதில், 500 பி.ஏ.சி.எஸ்.கள் ஜன் ஔஷதி கேந்திராக்களை தொடங்கி இருக்கின்றன.

நாட்டில் 10,500-க்கும் மேற்பட்ட ஜன் ஔஷதி கேந்திரங்கள் இயங்கி வருகின்றன. இவை 1,965-க்கும் மேற்பட்ட உயர்தர மருந்துகள் மற்றும் 293 அறுவைச் சிகிச்சைக்கான உபகரணங்களை சந்தையில் கிடைக்கும் பிராண்டட் மருந்துகளின் விலையில் இருந்து 50 முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it