காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு கடந்த 2019-ஆண்டு ரத்து செயப்பட்டது. இதை எதிர்த்து வழக்குகள்தொடரப்பட்ட நிலையில்உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று (திங்கட்கிழமை) 11-வது நாளாக நடைபெற்ற விசாரணையின் போது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சந்திர சூட் அரசியல் அமைப்பின் 35-ஏ.பிரிவு, ஜம்மு-காஷ்மீரில் வசிக்காத மக்களின் சில முக்கிய உரிமைகளை பறித்துள்ளதாக குறிப்பிட்டார்.காஷ்மீரில் அரசியல் அமைப்பு சட்ட 35- ஏ பிரிவை ரத்து செய்த பிறகு முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும் இதுவரை 16 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.வழக்கு விசாரணை இன்று (செவ்வாய்கிழமை) 12வது நாளாக நடைபெற்றது.
மக்கள் உரிமைகளை பறித்த 35-ஏ சட்டப்பிரிவு – உச்ச நீதிமன்றம்
Share it if you like it
Share it if you like it