மறைந்த தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் தி.மு.க சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் ‘கலைஞர் நூற்றாண்டு விழா’ பிரம்மாண்டமாக நடந்தது.
இந்நிலையில் நடிகை தீபா சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் மிக பிரம்மாண்டமாக கோடிக்கணக்கில் செலவு செய்து நடத்தப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடித்த நடிகர், நடிகைகள்,ஒப்பணையாளர்கள் , டெக்னீஷியன்கள் என யாருக்கும் இதுவரை சம்பளம் கொடுக்கப்படவில்லை, சம்பளத்தை கேட்டு கேட்டு சலித்து விட்டது என தீபா பதிவிட்டுள்ளார். இந்த பதிவானது சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
