கிராம பஞ்சாயத்து தேர்தல்: பா.ஜ.க. அமோக வெற்றி!

கிராம பஞ்சாயத்து தேர்தல்: பா.ஜ.க. அமோக வெற்றி!

Share it if you like it

அருணாச்சல பிரதேச மாநில பஞ்சாயத்து இடைத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க. அமோக வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இதன் மூலம் பா.ஜ.க. வெற்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அருணாச்சல பிரதேச மாநில தேர்தல் ஆணையம் ஜூன் 14-ம் தேதி 130 கிராம பஞ்சாயத்து உறுப்பினர் இடங்களுக்கும் ஒரு மாவட்ட கவுன்சிலர் இடத்திற்கும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதில், 116 கிராம பஞ்சாயத்து உறுப்பினர் தொகுதிகளில், ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே இருந்ததால், வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், பா.ஜ.க. 101 இடங்களையும், தேசிய மக்கள் கட்சி மற்றும் காங்கிரஸ் தலா 2 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 10 இடங்களையும் வென்றனர்.

ஜூலை 12-ம் தேதி ஒரு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் இடத்துக்கும், 14 கிராம பஞ்சாயத்து உறுப்பினர் இடங்களுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பா.ஜ.க. 7 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. இதன் மூலம் அருணாச்சல பிரதேச கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க. 108 கிராம பஞ்சாயத்து இடங்களை வென்று அமோக வெற்றி பெற்றிருக்கிறது. தேசிய மக்கள் கட்சி 5 இடங்களையும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (யுனைடெட்) தலா 3 இடங்களையும், சுயேட்சைகள் 11 இடங்களையும் கைப்பற்றின. குருங் குமே மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு மாவட்ட கவுன்சிலர் தொகுதியில், சுயேட்சை வேட்பாளர் பெங்கியா தயாங் வெற்றி பெற்றார். சங்லாங் மாவட்டத்தின் விஜோய்நகர் துணைப் பிரிவில் உள்ள 40 கிராம பஞ்சாயத்து இடங்கள் மற்றும் ஒரு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் இடத்திற்கான தேர்தல் சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் பிற நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 8,216 கிராம பஞ்சாயத்து உறுப்பினர் இடங்களும் 242 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் இடங்களும் உள்ளன. மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் தொகுதிகளில், ஆளும் பா.ஜ.க. 188, ஐக்கிய ஜனதா தளம் 10, காங்கிரஸ் 9, தேசிய மக்கள் கட்சி 7, அருணாச்சல பிரதேச மக்கள் கட்சி 3 மற்றும் சுயேச்சைகள் 24 இடங்களில் வெற்றிபெற்றிருக்கின்றன. அதேபோல, மாநிலத்திலுள்ள மொத்த கிராம பஞ்சாயத்து தொகுதிகளில் பா.ஜ.க. 6,378 இடங்களிலும், காங்கிரஸ் 378, தேசிய மக்கள் கட்சி243, ஐக்கிய ஜனதா தளம் 159, அருணாச்சல பிரதேச மக்கள் கட்சி 27 மற்றும் சுயேச்சைகள் 1,046 இடங்களில் வெற்றிபெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கான வாக்குபதிவு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில், மொத்தமுள்ள 17 இடங்களில் பா.ஜ.க. கூட்டணி 12 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது. காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.


Share it if you like it