கம்யூனிஸ்ட் கட்சியின் முகத்திரையை கிழிக்கும் விதமான காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து, அருணன் பேசுவாரா? என இணையதளவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாரத தேசத்தின் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்களை மூட பழக்கம் என விமர்சனம் செய்யும் கட்சியாக இருப்பது கம்யூனிஸ்ட் கட்சி. இவர்களது, பிரச்சாரம் ஹிந்து மதத்திற்கு எதிராக மட்டுமே இருக்கும். அதனை மெய்ப்பிக்கும் வகையில், இவர்களது செயல்பாடுகள் இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான சுயரூபத்தை மலையாள படம் ஒன்று அம்பலப்படுத்தி இருக்கிறது.
அதாவது, மேடைதோறும் கடவுள் இல்லை என்று கூறிவிட்டு கம்யூனிஸ்ட்கள் வீட்டில் சாமி கும்பிடுகின்றனர். இதனையே, அவர்கள் தங்களது வழக்கமாக கொண்டுள்ளனர் என கம்யூனிஸ்ட் கட்சியின் முகத்திரையை கிழிக்கும் வகையில் அந்த திரைப்படத்தின் காட்சி அமைந்துள்ளது. தோழர்களை தொடர்ந்து தோலுரித்து வரும் இதுபோன்ற படங்கள் குறித்து சீமான் பாராட்டிய அருணன் கருத்து தெரிவிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.