விடியல் அரசை ஒரு பொருட்டாக மதிக்காமல் தமிழகத்தின் உரிமையை பறித்த கேரள அரசு வாய் திறப்பார்களா தோழர்கள்..!

விடியல் அரசை ஒரு பொருட்டாக மதிக்காமல் தமிழகத்தின் உரிமையை பறித்த கேரள அரசு வாய் திறப்பார்களா தோழர்கள்..!

Share it if you like it

தி.மு.க தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நாளில் இருந்து. அமைச்சர்கள், நிர்வாகிகள், மற்றும் அக்கட்சியை சேர்ந்த கழக முன்னோடிகள் என பலர் தங்கள் மனம் போன போக்கில், நடப்பது நம் ஆட்சி என்று தங்கள் விருப்பம் போல நடந்து கொண்டு வருவதை தமிழக மக்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான ஆலோசனை கூட்டதை, திருச்சி திமுக அலுவலகத்தில் வைத்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் திருச்சி கலெக்டர் திவ்யதர்ஷினி, மாநகராட்சி கமிஷனர் சுப்பிரமணியன், திருச்சி போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் கலந்து சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

கலெக்டர், கமிஷனர், கட்சி அலுவலகத்தில் - எல்லை மீறிய தி.மு.க அமைச்சர்..! 

அதே போன்று ஒட்டன்சத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி அவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளை தனது கட்சி அலுவலகத்திற்கு அழைத்து அமரவைத்து கூட்டம் நடத்தி இருந்தார்.

Image

இப்படி தமிழக அமைச்சர்களும், அமைச்சரின் உதவியாளர்கள் என பலர் தங்கள் விருப்படி செயல்பட்டு தொடர்ந்து தமிழக மக்கள் மத்தியில் கடும் கோவத்தையும், வெறுப்பையும், சம்பாதித்து வருவது ஒருபுறம் என்றால். எல்லாவற்றிலும் தோல்வியடைந்த தமிழக அரசின் அனுமதி இல்லாமல் கேரள அரசு முல்லைபெரியாறு அணையில் சுயமாக முடிவு எடுத்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசு, மோடி, பா.ஜ.க என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அருணன், சுந்தரவள்ளி, போன்றவர்கள் கேரள அரசிற்கு எதிராக கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிக்காமல் தொடர்ந்து கள்ள மெளனம் காத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கேரள அரசின் முடிவிற்கு தனது எதிர்ப்பினையும் அவர் பேசிய காணொலியும் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it