இந்தியா மற்றும் ஜக்கிய நாடுகளின் சபை (United Nations Development Programme) இணைந்து (Electronic Vaccine Intelligence Network ) என்னும் புதிய செயலி ஒன்றினை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகள் தங்களிடம் எவ்வளவு தடுப்பூசி மருந்துகள் கையிருப்பு உள்ளது என்பதை குறித்தும். இந்திய மக்கள் கொரோனா தடுப்பூசி மற்றும் இன்னும் பிற மருத்துவ விவரங்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இச்செயலில் இன்னும் சில பணிகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதால். மாநில அரசுகள் தங்களிடம் உள்ள தடுப்பூசிகள் குறித்த விவரங்களை இச்செயலில் பதிவு செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டு கொண்டு உள்ளது.
தமிழக அரசிடம் தற்பொழுது எவ்வளவு தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது என்று பா.ஜ.க இளம் தலைவர் எஸ்.ஜி சூர்யா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் மிக தெளிவாக குறிப்பிட்டு உள்ளார். ஆனால் இதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மத்திய அரசு தடுப்பூசி குறித்த விவரங்களை தெரிவிக்க கூடாது என்று வழக்கம் போல உலக டெண்டர் கதையை மக்களிடம் அளந்து விட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி இருப்பை மக்களிடம் தெரிவிக்கக் கூடாது என ஒன்றிய அரசு கூறியுள்ளது. மக்களிடையே உண்மை நிலையை தெரிவிப்பதுதான் சரியாக இருக்கும். தற்போது தமிழ்நாட்டில் 1060 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது.
– மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்#CoronaVaccine pic.twitter.com/JHZJMoya7Q
— Kalaignar Seithigal (@Kalaignarnews) June 10, 2021
தமிழகத்திற்கு ஜூன் to ஜூலை மொத்தம் 42,58,760 தடுப்பூசிகள் கொடுக்கப்படும் என ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது. தகுந்த முறையில் அதை திட்டமிட்டு செலுத்துவது தான் தமிழக அரசின் வேலை. அதை விடுத்து வெட்டி பேச்சும், விதண்டாவதாமும் எப்பயனும் தரப்போவது இல்லை. ஆளும்கட்சியாக செயல்பட துவங்குங்கள். https://t.co/E8cP0p86ol pic.twitter.com/jkNQgmZe4L
— SG Suryah (@SuryahSG) June 10, 2021