தி.மு.க ஆட்சி பொறுப்பு ஏற்ற நாள் முதல் தி.மு.க நிர்வாகிகள் அக்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களின் அராஜக போக்கு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் கடும் கோவத்தையும், அதிர்ச்சியையும், ஏற்படுத்தி வரும் இச்சூழ்நிலையில் கடலூர் தி.மு.க எம்.பி ரமேஷ் அவர்களது ஆலையில் பண்ருட்டி மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழை தொழிலாளி கோவிந்தராஜ் அவர்கள் கூலி உயர்வு கேட்டதற்காக மர்மமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் குறித்து தமிழகத்தை சேர்ந்த எந்த ஒரு ஊடகமும் வாய் திறக்காமல் தொடர்ந்து கள்ள மெளனம் காத்து வரும் இவ்வேளையில். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின் படி பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வத்தாமன் அவர்கள் இறந்தவரது இல்லத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்து உள்ளார். மேலும் இறந்தவரின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க பா.ஜ.க உறுதுணையாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.