ஜிஹாதி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, மதரஸா ஆசிரியர் மற்றும் 11 மௌலவிகள் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அஸ்ஸாம் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கின்றன. நாட்டுக்கு எதிராகவும், மாநிலத்துக்கு எதிராகவும் சதிச் செயல்களில் ஈடுபடுபவர்களையும், சதித் திட்டம் தீட்டுபவர்களையும் மாநில போலீஸார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், மாநிலத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயன்றதாக மதரஸா ஆசிரியர் மற்றும் 11 மௌலவிகளை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
மோரிகான் மாவட்டம் மொய்ராபரியில் 2018-ம் ஆண்டு முதல் ஜாமி-உல்-ஹூதா என்கிற மதரஸாவை நடத்தி வருபவர் முப்தி முஸ்தபா. இவரது மதரஸாவில் முஸ்லீம் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட தூண்டப்படுவதாகவும், மாநிலத்துக்கும் நாட்டுக்கும் எதிரான சதித் திட்டங்கள் தீட்டப்படுவதாகவும், மாநில போலீஸாருக்கும், மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கும் தகவல் கிடைத்தது.
மேலும், பயங்கரவாத அமைப்பான அல்கொய்தா, பங்களாதேஷின் பயங்கரவாத அமைப்பான அன்சருல்லா பங்களா அணி ஆகிய அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதும், மேற்கண்ட பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்தும், பல இஸ்லாமிய நாடுகளில் இருந்து நிதியுதவி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, முப்தி முஸ்தபாவின் வீடு மற்றும் மதரஸாவில் மாநில போலீஸாரும், ராணுவத்தினரும், இதர உளவுப் பிரிவினரும் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் பல சென்போன்கள், வங்கி பாஸ்புத்தகங்கள் மற்றும் பல முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, முப்தி முஸ்தபாவை கைது செய்த போலீஸார், ஜாமி-உல்-ஹூதா மசூதிக்கும் சீல் வைத்தனர். மேலும், இதேபோல மோரிகான், பர்பேட்டா, கவுஹாத்தி, கோல்பாரா உட்பட பல்வேறு இடங்களில் ஜிகாதி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 11 மௌலவிகளையும் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.