ஸ்டாலின வரச்சொல்லுங்க… ஒரு பதிலத்தான் சொல்லச் சொல்லுங்க.. இணையத்தில் வைரலாகும் ‘அசுரன்’ பாடல்!

ஸ்டாலின வரச்சொல்லுங்க… ஒரு பதிலத்தான் சொல்லச் சொல்லுங்க.. இணையத்தில் வைரலாகும் ‘அசுரன்’ பாடல்!

Share it if you like it

அசுரன் படத்தில் இடம் பெற்றிருக்கும் கண்டா வரச்சொல்லுங்க என்கிற பாடலின் வரிகளை மாற்றி ‘ஸ்டாலின வரச்சொல்லுங்க… ஒரு பதிலத்தான் சொல்லச் சொல்லுங்க’ என்று மெட்டமைத்திருக்கும் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தி.மு.க.வினரின் சொத்து மதிப்பு குறித்த பட்டியலை, கடந்த ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியிட்டார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இதில், மொத்தம் 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களின் பட்டியல் இடம்பெற்றிருந்தது. இது தமிழக மக்களிடையை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடேங்கப்பா, இவ்வளவு சொத்தா என்று மக்கள் வாயைப் பிளந்தனர். மேலும், இந்த சொத்தில் தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் 10 லட்சம் ரூபாய் கொடுக்குமாறு சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வந்தனர்.

இது ஒருபுறம் இருக்க, குற்றச்சாட்டு சொல்லப்பட்டதில் ஒரு சிலரைத் தவிர மற்ற யாரும் தனக்கு இவ்வளவு சொத்து இருப்பதை மறுக்கவில்லை. இந்த சூழலில்தான், அண்ணாமலை குற்றம்சாட்டிய 1,34,000 கோடி ரூபாய் தொடர்பாக இணையத்தில் ஒரு பாடம் வைரலாகி வருகிறது. அதாவது, தனுஷ் நடித்த அரசும் படத்தில் இடம்பெற்றிருக்கும் கண்டா வரச் சொல்லுங்க பாடலின் வரிகளை மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. ‘சூரியனும் சாஞ்சிடுச்சு… விடியல் ஆட்சி மடிஞ்சிருச்சு… அண்ணாமலை வச்ச ஆப்பு… ஊபிஸ காணும் மாப்பு…’ என்று தொடங்கும் அப்பாடல், ‘ஸ்டாலின வரச்சொல்லுங்க… ஒரு பதிலத்தான் சொல்லச் சொல்லுங்க’ என்று ரீதியில் ஒலிக்கிறது.

இப்பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்பாடலை நீங்களும் கேட்க கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோவை கிளிக் செய்யுங்கள்….


Share it if you like it