வன்னிய குல சூத்திரர்கள் என வி.சி.க. புகார்: பா.ஜ.க. மூத்த தலைவர் ஆவேசம்!

வன்னிய குல சூத்திரர்கள் என வி.சி.க. புகார்: பா.ஜ.க. மூத்த தலைவர் ஆவேசம்!

Share it if you like it

வன்னிய குல சூத்திரர்கள் என வி.சி.க. புகார் அளித்துள்ளது. இதுதொடர்பாக, பா.ஜ.க. மூத்த தலைவர் அஸ்வத்தாமன் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தனது சமூகவலைத்தள பக்கத்தில் அஸ்வத்தாமன் குறிப்பிட்டு இருப்பதாவது :

செங்கல்பட்டு மாவட்டத்தில் வன்னிய குல ஷத்ரிய மரபினர் சார்பாக திரௌபதி அம்மன் தீமிதி திருவிழா என்று போஸ்டர் ஒட்டப்படுகிறது. அப்படி ஒட்டக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பு காவல்துறையில் புகார் கொடுக்கிறார்கள். இது என்ன மாதிரியான கீழ்தரமான அரசியல். ஒரு சமூகம் தன்னுடைய இறை வழிபாட்டை மேற்கொள்ளுவது அடிப்படை உரிமையாக அரசியலமைப்பு சட்டத்தில் அங்கீகரித்துக்கொடுத்துள்ளார் அண்ணல் அம்பேத்கர். அதை எதிர்க்கும் விசிக தடை செய்யப்படவேண்டும்.

அது ஒரு புறம் என்றால், அந்த புகாரில், “வன்னிய குல சூத்திர மரபினர்” என்று போட்டிருக்கிறார்கள். காவல்துறையும் அந்த புகாரை ஏற்று CSR காபியிலும் அதையே போட்டு கொடுக்கிறார்கள்.

Official gazette லேயே ‘வன்னிய குல ஷத்திரியர்கள்’ என்று இருக்கும்போது, வேண்டுமென்றே அடுத்த சமுதாயத்தை பட்டியல் சமூகத்திற்கு எதிராக தூண்டிவிட இந்த கேவலமான அரசியலை விசிக செய்கிறது. ‘சூத்திரர்’ என்று சொல்லி ஒருவரை இழிவு படுத்தலாம் என விசிக கருதுகிறதா?! பட்டியல் சமூகம் என்பதையோ , சூத்திரர் என்பதையோ இழிவானதாக விசிக கருதுகிறதா ?! ஒரு பெரும்பான்மை சமூகத்தை வேண்டுமென்றே வன்மத்தோடு தூண்டிவிட முயற்சிக்கும் விசிகவின் இந்த செயலுக்கு தமிழக காவல்துறையும் துணைபோவது ஏன் ?!


Share it if you like it