அறநிலையத்துறையா?… அபகரிப்புத்துறையா? அஸ்வத்தாமன் பாய்ச்சல்!

அறநிலையத்துறையா?… அபகரிப்புத்துறையா? அஸ்வத்தாமன் பாய்ச்சல்!

Share it if you like it

இதுதொடர்பாக, பா.ஜ.க. மூத்த தலைவர் அஸ்வத்தாமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் :

அறநிலைய அபகரிப்பு துறையின் அடுத்த அராஜகம்! திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி திருவிழாவில் கோவிலுக்குள் பக்தர்களுக்கு தடை விதித்துள்ளது அறநிலைய அபகரிப்புதுறை. இதேபோல, சிதம்பரம் நடராஜர் கோவில் திருவிழாவை முன்னிட்டு கனகசபை என்கிற ஒரு 300 sq.ft அளவே இருக்கும் ஒரு சிறிய இடத்தில் பக்தர்களை அனுமதிக்க முடியாது என்று நிர்வாக காரணங்களுக்காக எடுத்த முடிவை, அரசியல் ஆக்கி, அங்கு அத்துமீறி உள்ளே சென்று ரவுடிசம் செய்து அப்பட்டமான criminal trespass ல் ஈடுபட்ட அறநிலைய அபகரிப்பு துறையே ,

இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி திருவிழாவில் கோவிலுக்குள் ஒரு பக்தர்களை கூட அனுமதிக்காத கயமையை செய்கிறது. எவ்வளவு பெரிய முரண்பாடு! இவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், திருவிழாவில் கோவிலுக்கு உள்ளே கூட, ஒரு பக்தர்களையும் அனுமதிக்க மாட்டார்களாம். ஆனால் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனக சபையின் மீது திருவிழா நேரத்தில் எல்லா பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உள்ளே புகுந்து ரவுடிசம் செய்வார்களாம்.

உங்கள் ஆட்டம் எல்லாம் மக்கள் விழிப்புணர்வு பெறுகிற வரையில்தான். அறநிலைய அபகரிப்பு துறை மக்கள் போராட்டத்தால் துரத்தப்படுகிற நாள் வெகுதொலைவில் இல்லை. பக்தர்கள் அனுமதிக்கப்பட்டால் தான் அதற்கு பெயர் திருவிழா! அறநிலையத்துறை அதிகாரிகள் 5 பேர் நின்று கொண்டிருந்தால் அதற்கு பெயர் திருவிழா அல்ல ! அதற்கு பெயர் வேறு . ஏற்கனவே அறநிலைய அபகரிப்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல கோவில்களில் சிலைகளும், நகைகளும் காணாமல் போயிருக்கும் நிலையில் இப்படி பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் அறநிலைய அபகரிப்பு துறை அதிகாரிகள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்பது சந்தேகத்தை எழுப்புகிறது.

பக்தர்களுக்காகத்தான் கோவிலில் கட்டப்பட்டது. அந்த பக்தர்கள் உண்டியலில் போடுகிற காசில் தான், அறநிலையத்துறை அதிகாரிகள் மாதமாதம் சம்பளம் பெறுகிறார்கள். அந்த காசில் தான் அமைச்சர் சேகர்பாபுவின் காருக்கு பெட்ரோல் போடப்படுகிறது. அப்படிப்பட்ட பக்தர்களையே அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லுவதற்கு அறநிலைய அபகரிப்புத்துறை அதிகாரிகளுக்கும் அமைச்சர் சேகர்பாபுவுக்கும் என்ன உரிமை இருக்கிறது ? பக்தர்களை அனுமதிக்க மாட்டேன் என்று சொல்வதற்கு நீங்கள் யார்?!

எனவே, அறநிலைய அபகரிப்பு துறையும், அதனுடைய அமைச்சர் சேகர்பாபு அவர்களும் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆனி வர்ஷாபிஷேக நிகழ்வுக்கு அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும்.


Share it if you like it