பிதுங்கிய கண்… கிழிந்த வாய்… அவலட்சணமான மீன்!

பிதுங்கிய கண்… கிழிந்த வாய்… அவலட்சணமான மீன்!

Share it if you like it

ஹாலிவுட் ‘ஹாரர்’ திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போன்ற அகோரமான ஆழ்கடல் ஜந்து ஒன்று தென்கிழக்கு ஆஸ்திரேலிய கடலில் பிடிபட்டிருக்கிறது.

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவின் பெர்மகுய் பகுதியைச் சேர்ந்தவர் ஜசோன் மோய்ஸ். ட்ராப்மேன் பெர்மகுய் என்று அழைக்கப்படும் இவர் ஒரு மீனவர். இவரது தனது சொந்த ஊரான பெர்மகுய் கடற்கரையில் வழக்கம் போல மீன் பிடித்திருக்கிறார். அப்போது, அவரது வலையில் ஒரு விசித்திரமான ஜந்து சிக்கி இருக்கிறது. வலையை எடுத்துப் பார்த்தவருக்கு பயங்கர அதிர்ச்சி. பார்க்கவே சகிக்காத வகையில் மிகவும் அகோரமாக இருந்திருக்கிறது அந்த உயிரினம். இந்த உயிரினம் குறித்து ஜசோன் மோய்ஸ் கூறுகையில், “நான் பார்த்ததிலேயே மிகவும் அவலட்சணமான கடல்வாழ் உயிரினம் இதுதான்” என்கிறார்.

அந்த ஜந்து பிங்க் நிறத்துடனும், பிதுங்கிய கண்களுடனும், பெரிய வாயுடனும், கூரிய பற்களுடனும் அகோரமாக காட்சியளிக்கிறது இதுவும் ஒருவகை மீன்தான் என்று கூறப்படுகிறது. கடலில் சுமார் 540 மீட்டர் ஆழத்தில் இந்த மீன் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த மீன் சுமார் 4 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. இதுகுறித்து மீன் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “இது ஒரு ஆழ்கடல் மீன். இது ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா மற்றும் நியூசிலாந்தின் கரையோரங்களில் உள்ள ஆழமான நீரில் வாழ்கிறது. இந்த மீன்கள் 30 செ.மீட்டருக்கும் குறைவான வளர்த்தியுடையவை. கடல் மட்டத்தை விட 60 முதல் 120 மடங்கு அழுத்தம் அதிகமாக இருக்கக்கூடிய 600 முதல் 1,200 ஆழமான நீரில் வாழக்கூடியவை. இந்த ப்ளாப் ஃபிஷ் மீன்கள் சைக்ரோலுடிடே குடும்பத்தைச் சேர்ந்தவை” என்கிறார்கள்.

ஆனால், இதை பார்த்த நெட்டிசன்கள் இது மீனே இல்லை என்கிறார்கள். இது ஏதோ புதுவகை உயிரினமாக இருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.


Share it if you like it