பார்வையற்ற முஸ்லிம் கவிஞருக்கு அயோத்தி கும்பாபிஷேக அழைப்பு !

பார்வையற்ற முஸ்லிம் கவிஞருக்கு அயோத்தி கும்பாபிஷேக அழைப்பு !

Share it if you like it

அயோத்தி ராமர் கோவிலில் வரும் 22ஆம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.

அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், திரை பிரபலங்கள், கிரிக்கெட் நடசத்திரங்கள் உள்ளிட்டோருக்கு நேரடியாக அழைப்பிதழ் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தை சேர்ந்த பார்வையற்ற முஸ்லிம் கவிஞரும், பஜன் பாடகருமான அக்பர் தாஜூக்கு அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அயோத்தி கும்பாபிஷேகத்திற்கு அழைக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

கண்டிப்பாக விழாவில் கலந்துகொள்வேன். என்னுடைய பல நிகழ்ச்சிகளை தவிர்த்துவிட்டு ஜனவரி 14ஆம் தேதியே அயோத்தி சென்று இராமர் குறித்து பக்தி பாடல்கள் மற்றும் கவிதைகள் பாடுவேன் என அக்பர் தாஜ் தெரிவித்துள்ளார்.


Share it if you like it