அயோத்தி கும்பாபிஷேகம் காங்கிரஸ் புறக்கணிப்பு : காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா !

அயோத்தி கும்பாபிஷேகம் காங்கிரஸ் புறக்கணிப்பு : காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா !

Share it if you like it

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா மற்றும் பிரான் பிரதிஷ்டை ஆகியவை வரும் 22-ம் தேதி நடைபெறுகின்றன.

இவ்விழாவில் பங்கேற்குமாறு நாடு முழுவதும் உள்ள முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பலருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

ஆனால், அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் அறிவித்திருக்கிறார்கள். அதோடு, இராமர் கோவில் குறித்தும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை புறக்கணித்தது மற்றும் இராமர் கோவில் விவகாரம் குறித்து விமர்சிப்பது உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவித்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. சவுடா தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

மகேஷானா மாவட்டம் விஜாப்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வான சவுடா, தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சங்கர் சவுத்ரியிடம் வழங்கி இருக்கிறார். இதனிடையே, சவுடா விரைவில் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


Share it if you like it