நடிகர் ரஜினிக்கு அயோத்தி ராமஜென்ம பூமி பிரதிஷ்டை அழைப்பிதழ் !

நடிகர் ரஜினிக்கு அயோத்தி ராமஜென்ம பூமி பிரதிஷ்டை அழைப்பிதழ் !

Share it if you like it

பாரதத்தின் ஆன்மீக கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கவிருக்கும் அயோத்தி ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் ஜனவரி 22 அன்று நடைபெறவிருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து, வரும் 22ம் தேதி அன்று நமது பிரதமர் கரங்களால் திறந்து வைக்கப்பட உள்ளது. பகவான் ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம், பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளிப் பண்டிகையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பாரத பிரதமர் மோடி அவர்கள், கோவில் திறப்பு தினத்தன்று நாட்டு மக்கள் அனைவரையும் அவரவர் இல்லங்களில் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிகழ்விற்காக , ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக பிரமுகர்கள், தன்னார்வலர்கள் என பலரும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்களை சந்தித்து அழைப்பிதழ் மற்றும் அட்சதையை வழங்கி வருகின்றனர். முன்னதாக தன்னார்வலர்கள் ராஜ்பவனில் ஆளுநர் ரவியை சந்தித்து ஸ்ரீராம ஜென்மபூமி அட்சதையை வழங்கினர். அதன்பிறகு ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எடப்பாடி. பழனிசாமியை சந்தித்து அழைப்பிதழை வழங்கினர்.

இந்தநிலையில் அயோத்தி ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில் பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையும் அவரது குடும்பத்தினரையும் ஜனவரி 22 ம்தேதி அயோத்தி கும்பாபிஷேக நிகழ்வுக்கு வர வேண்டிய அழைப்பிதழை கொடுப்பதற்காக சென்னை போயஸ் கார்டனில் அவரது இல்லத்தில் ஆர் எஸ் எஸ். தென் பாரத அமைப்பாளர் திரு.செந்தில்குமார், தென்பாரத மக்கள் செயலாளர் (மக்கள் தொடர்பு) திரு.பிரகாஷ் மற்றும் மாநில இணைச்செயலாளர் (மக்கள் தொடர்பு) திரு.இராம இராஜசேகர், மாநகர் பொறுப்பாளர் திரு.ராம்குமார் மற்றும் பாஜக, சமூக ஊடக – பார்வையாளர்ரா . அர்ஜுன் மூர்த்தி ஆகியோர் அழைப்பிதழை வழங்கி வரவேற்றனர். உறுதியாக குடும்பத்துடன் வருவதாகவும் மிகவும் பாக்கியமாக கருதுவதாகவும் எல்லாம் ராமரின் அருள் எனவும் உணர்வு பூர்வமாக ரஜினிகாந்த் அவர்கள் கூறி பயபக்தியுடன்அழைப்பிதழை ஏற்றுக்கொண்டார்கள்.


Share it if you like it