ரூ.1,800 கோடியில் ராமர் கோயில்..!

ரூ.1,800 கோடியில் ராமர் கோயில்..!

Share it if you like it

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு 1,800 கோடி ரூபாய் செலவாகும் எனவும், 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பணிகள் நிறைவடைந்து, 2024 ஜனவரி மாதம் ராமர் சிலை நிறுவப்படும் என்றும், அறக்கட்டளை பொதுச் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்த மசூதி, ராமர் கோயிலை இடித்து விட்டு கட்டப்பட்டது என்பது அகழாய்வுகள் மூலம் நிரூபணமானது. இதையடுத்து, மேற்கண்ட இடம் ராமர் கோயிலுக்குச் சொந்தமானது என்று தீர்ப்புக் கூறப்பட்டது. மேலும், அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அயோத்தியில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ராமர் கோயிலுக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். இதன் பிறகு, ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், அறக்கட்டளை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா, அறக்கட்டளைத் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ், பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி, உறுப்பினர் உடுப்பி பீடாதீஸ்வர் விஸ்வதீர்த்த பிரசன்னாச்சார்யா, அனில் மிஸ்ரா, மஹந்த் தினேந்திர தாஸ், காமேஷ்வர் சௌபால், முன்னாள் அலுவல் உறுப்பினர் மாவட்ட நீதிபதி நிதிஷ்குமார், கேசவ் பராஷரன், யுக்புருஷ் பர்மானந்த், விமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா மற்றும் முன்னாள் மாநில உள்துறை முதன்மைச் செயலாளர் சஞ்சய் குமார் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு அறக்கட்டளையின் பொதுச்செயலர் சம்பத் ராய் கூறுகையில், “கோயில் வளாகத்தில் ராமாயண காலத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் முக்கிய ஹிந்து சமய ஜீயர்களின் சிலைகளை வைக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நிபுணர்கள் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் ராமர் கோயில் கட்டுவதற்கு மட்டும் ரூ.1,800 கோடி செலவாகும் என்று அறக்கட்டளை மதிப்பிட்டிருக்கிறது. 2023 டிசம்பரில் கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிடும். 2024 ஜனவரியில் மகர சங்கராந்தி பண்டிகையின்போது ராமர் கருவறையில் அமர்ந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.


Share it if you like it