‘பாகுபலி மோடி’: வைரலாகும் கார்ட்டூன்!

‘பாகுபலி மோடி’: வைரலாகும் கார்ட்டூன்!

Share it if you like it

‘பாகுபலி’ திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு காட்சியை மையப்படுத்தி, பிரதமர் மோடியை மகேந்திர பாகுபலியாக சித்தரித்து வரையப்பட்டிருக்கும் கார்ட்டூன் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற உக்ரைன், மீண்டும் தங்கள் நாட்டுடன் இணைய வேண்டும் என்பது ரஷ்யாவின் விருப்பம். ஆனால் உக்ரைனோ, நேட்டோ நாடுகளுடன் இணையும் முடிவில் இருக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கிறது. இதனால், அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது. எனவே, உக்ரைனுக்கு படிக்கச் சென்ற மற்றும் அங்கு குடியிருக்கும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளி நாட்டினர் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இதையடுத்து, உக்ரைனில் இருக்கும் தங்கள் நாட்டு பிரஜைகளை உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி அனைத்து நாடுகளும் கேட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு வெளியேறும் மக்களை மீட்பதற்கான முயற்சியை எந்த நாடுகளும் முன்னெடுக்கவில்லை. சீனா மட்டும் ஒரே ஒரு விமானத்தில் தங்களது நாட்டு மக்களை மீட்டிருக்கிறது. ஆனால், பாரத பிரதமர் மோடியோ, மத்திய அமைச்சர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜுஜு, ஹர்தீப் சிங் பூரி மற்றும் வி.கே.சிங் ஆகியோரை உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பி வைத்து, இந்தியர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து, பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்.

இதற்காக, ஏராளமான விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்திய விமானப்படை விமானமும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறது. அந்த வகையில், உக்ரைனுக்கு மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படிக்கச் சென்ற மாணவர்கள் உட்பட இதுவரை 3,726 இந்தியர்கள் 19 விமானங்கள் மூலம் வெற்றிகரமாக மீட்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், பல விமானங்கள் இந்தியர்களை மீட்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், ரஷ்ய அதிபர் புடினுடன் பேசி, இந்தியர்களை மீட்பதற்காக பேச்சுவார்த்தை என்கிற பெயரில் சுமார் 6 மணி நேரம் போரை நிறுத்தி வைத்திருந்தார்.

இந்த நிலையில்தான், பாகுபலி திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு காட்சியை மையப்படுத்தி, பாரத பிரதமர் நரேந்திர மோடியை மகேந்திர பாகுபலியாக சித்தரித்து ஒரு கார்ட்டூன் வரையப்பட்டிருக்கிறது. இந்த கார்ட்டூன்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

பிரதமர் மோடியை மகேந்திர பாகுபலியாக சித்தரித்து வரையப்பட்டிருக்கும் கார்ட்டூன்…

ருமேனியாவில் முகாமிட்டிருக்கும் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மாணவர்களுக்கு ஆறுதல் கூறி தைரியப்படுத்தும் காட்சி…


Share it if you like it