பக்ரீத் தளர்வால் வந்த வினை –  கேரள கம்யூனிஸ்டுகளால் மக்கள் அவதி

பக்ரீத் தளர்வால் வந்த வினை – கேரள கம்யூனிஸ்டுகளால் மக்கள் அவதி

Share it if you like it

இந்தியாவில் கோவிட் இரண்டாம் அலை குறைந்து வரும் நிலையில். கேரளாவில் கடந்த 50 நாட்கள் இல்லாத அளவில் கொரோனா தொற்று மிக அதிகமாக பரவி இருக்கிறது. அங்கு நேற்று முன்தினம் 12,818 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று 17,518 ஆக உயர்ந்தது.

முன்னதாக பக்ரீத் பண்டிகையை ஒட்டி கொரோனா ஊரடங்கு விதிகளை தளர்த்துவதாக கேரளா கம்யூனிச அரசு அறிவித்தது, இதற்க்கு பல்வேறு தரப்பினரும் மறுப்பு தெரிவித்த போதும் சிறுபான்மை ஓட்டுக்காக மக்களின் உயிரை ஆபத்தில் தள்ளும் இந்த செயலில் துணிந்து இறங்கியது கேரளா அரசு. இதனால் தற்பொழுது கேரளாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

கொரோனா தடுப்பு விஷயத்தில் கேரளா கம்யூனிஸ்ட் அரசிடம் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும், “கேரளா மாடல்” “கியூபா மாடல்” என தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்த தமிழக கம்யூனிஸ்டுகள் இப்பொழுது மௌனம் காப்பது ஏன் என சமூகவலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it