லண்டனில் இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், அந்த அமைப்பினருக்கு தடை விதிக்க வேண்டும் இங்கிலாந்து நாட்டின் எம்.பி. பாப் பிளாக்மேன் அந்நாட்டு பார்லிமென்ட்டில் வலியுறுத்தி இருக்கிறார்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எம்.பி. பாப் பிளாக்மேன், பல்வேறு விவகாரங்களில் பா.ஜ.க. தலைமையிலான இந்திய அரசுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கெனவே காஷ்மீர் விவகாரத்தில் கருத்துத் தெரிவித்த பாப் பிளாக்மேன், காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று கூறியிருந்தார். அதேபோல, சமீபத்தில் பாரத பிரதமர் மோடி குறித்து இங்கிலாந்து நாட்டின் தொலைக்காட்சி நிறுவனமான பி.பி.சி. ஆவணப்படம் வெளியிட்ட நிலையில், இதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்த பாப் பிளாக்மேன், அந்த ஆவணப்படத்தை பி.பி.சி. எடுக்கவில்லை, தனியார் ஏஜென்ஸி மூலம் எடுக்கப்பட்டது என்ற உண்மையைப் போட்டு உடைத்தார்.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பான வாரிஸ் பஞ்சாப் தே அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங் ஆதரவாளர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டதை கண்டித்து, லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தி, இந்திய தேசியக் கொடியையும் இறக்கி அவமானப்படுத்தினர். இந்த சூழலில், இங்கிலாந்து நாட்டின் பார்லிமென்ட் கூட்டம் நடந்தது. இதில் பேசிய அந்நாட்டின் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.யான பாப் பிளாக்மேன், “நாம் இந்த நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்து வருகிறோம். அவர்களோ இந்திய தூதரத்தின் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். ஆகவே, காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு நம் நாட்டில் தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி இருக்கிறார்.
https://mobile.twitter.com/AskAnshul/status/1639322988704333827