நாங்கள் சூப்பராகவே இருக்கிறோம்: ஐ.நா. சபையில் இந்தியாவை பெருமைப்படுத்திய ‘பட்டியல்’ மாணவி!

நாங்கள் சூப்பராகவே இருக்கிறோம்: ஐ.நா. சபையில் இந்தியாவை பெருமைப்படுத்திய ‘பட்டியல்’ மாணவி!

Share it if you like it

பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளை விட, இந்தியாவில் தலித்துகளின் நிலை மிகவும் சிறப்பாகவே இருக்கிறது என்று, ஐக்கிய நாடுகள் சபையின் மேடையில் இந்தியாவின் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முனைவர் பட்டம் படிக்கும் மாணவி கூறி, நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் ரோகினி கவ்ரி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர், ஒரு துப்புரவுத் தொழிலாளியின் மகள். இவர், தற்போது சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் பிஎச்.டி. படித்து வருகிறார். முனைவர் பட்ட மாணவியான இவர், ஒரு தலித் ஆர்வலர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 52-வது கூட்டத்தில் பேச வாய்ப்புக் கிடைத்தது. இதில் பேசிய ரோகினி, “நம் நாட்டில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் ஜனாதிபதியாகவும், ஒரு ஓ.பி.சி. வகுப்பைச் சேர்ந்தவர் பிரதமராவும் இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட ஜாதியில் இருந்து வருபவர்கூட ஜனாதிபதி அல்லது பிரதமராக வேண்டும் என்று கனவு காணும் அளவுக்கு, அதாவது, ஹார்வர்டு அல்லது ஆக்ஸ்போர்டுக்குச் செல்லக்கூடிய அளவுக்கு இந்தியாவின் அரசியலமைப்பு வலுவாக இருக்கிறது.

நான் ஜெனிவாவில் முனைவர் பட்டம் பெறுவதற்கு, இந்திய அரசிடமிருந்து 1 கோடி ரூபாய் உதவித்தொகை கிடைத்திருக்கிறது. சில நாடுகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும்கூட ஐ.நா.வில் இந்தியா குறித்து தவறான படத்தைக் காட்டுகின்றன. நீங்கள் உங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தினால், நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும். அமெரிக்கா சென்றால் அங்கு கருப்பு, வெள்ளை பிரச்னை இருக்கிறது. அதேபோல, இந்தியாவிலும் ஜாதி பாகுபாடுகள் இருக்கின்றன. அதேசமயம், நல்ல விஷயங்களும் இருக்கின்றன. ஊடகங்களில் காட்டுவதுபோல் இந்தியா இல்லை. இதற்கு ஒரு தலித் பெண்ணாக நான்தான் உதாரணம். நாங்கள் பல மாற்றங்களைச் சந்தித்து வருகிறோம், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தலித் பெண்ணான எனக்கு இங்கு வந்து என் மனதைச் சொல்லும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமைப்படுகிறேன்.

பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தலித்துகளின் நிலை மிகவும் சிறப்பாகவே இருக்கிறது. ஏனெனில், இந்தியாவில் இட ஒதுக்கீடு கொள்கை இருக்கிறது. நான் இங்கு வந்திருப்பது ஒரு பெரிய சாதனை” என்று கூறியிருக்கிறார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ரோகினி, “ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவது எனது கனவு. அது தற்போது நிறைவேறி இருக்கிறது. இந்தியாவில் தலித் சமூகத்தின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார். ரோகினியின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 1 கோடிக்கும் மேற்பட்டோரால் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க, கடந்த 2019-ம் ஆண்டு தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி பிரேமலதா என்பவருக்கு, இதே ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அப்போது, அவர் ஜாதிய அடக்கு முறைகள், நீட் தேர்வால் நிகழும் மரணம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துப் பேசி இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டு சம்பவங்களை ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிவிட்டு வரும் நெட்டிசன்கள், இதுதான் தமிழகத்துக்கும், பிற மாநிலங்களுக்கும் உள்ள வித்தியாசம். அயல் நாடுகளில் இந்தியாவை அவமானப்படுத்துவதையே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள். ஆனால், வட மாநிலத்தவர் இந்தியாவை பெருமைப்படுத்தி வருகின்றனர் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்கிற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.


Share it if you like it