திருப்பூரில் சட்டவிரோதமாக தமிழ்நாட்டுக்குள் போலி ஆதார் அட்டை எடுத்து நுழைந்த வங்க தேசத்தினர் பெருந்துறையில் கைது

திருப்பூரில் சட்டவிரோதமாக தமிழ்நாட்டுக்குள் போலி ஆதார் அட்டை எடுத்து நுழைந்த வங்க தேசத்தினர் பெருந்துறையில் கைது

Share it if you like it

ஷிமுல் காஜி, 30, கடந்த 5 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இவர் சட்ட விரோதமாக போலி ஆதார் அட்டையை வைத்து வேலை செய்து வருவது தெரியவந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவருடன் இன்னும் சைபுல் இஸ்லாம், 40, மன்னமோலல், 31, ஆகியோர் 2 பேர் தொடர்பில் உள்ளார்கள் என தெரியவந்துள்ளது.மேலும் தொடர்பில் இருந்த அவர்களிடமும் உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரிந்து அவர்களையும் போலீசார் கைது செய்தனர். ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை எப்படி பெற்றனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மத்திய உளவு பிரிவினரும் விசாரித்து வருகின்றனர்.

இதுபோன்ற ஆபத்துகளை தவிப்பதற்காகவே மத்திய அரசு CAA ,NRC போன்ற திட்டத்தை அமுல்படுத்தியது.அப்பொழுது எதிர்த்த கட்சிகள் இப்பொழுதாவது புரிந்து கொள்ள வேண்டும் என அரசியல் விமர்சரர்கள் தெரிவித்து வருகின்றன.

 

blank


Share it if you like it