கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய 2,399 பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லீம்கள் இந்தியாவுக்குள் அத்துமீறி ஊடுருவுவது அதிகரித்து வருகிறது. இவ்வாறு ஊடுருவிய முஸ்லீம்கள்தான் இந்தியாவில் நடக்கும் வன்முறைகளுக்கு காரணம் என்கிற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்த சூழலில், பங்களாதேஷ் ரோஹிங்கியா முஸ்லீம்கள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், “இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வங்கதேச நாட்டினரை கண்டறிந்து நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி இருக்கிறது.
அதன்படி, தவறான முறையில் ஆதார் அட்டையை பெற்ற இந்த சட்டவிரோத குடியேற்றவாசிகளின் விவரங்களை உரிய சட்ட நடவடிக்கைக்காக UIDAI உடன் பகிர்ந்து கொள்ளுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. மேலும், சட்டவிரோதமாக குடியேறிவர்களால் பெறப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள், ஓட்டுநர் உரிமங்கள், ரேஷன் கார்டுகள் போன்ற அடையாள ஆவணங்களை ரத்து செய்யவும் மாநில அரசுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
இதனிடையே, உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்களிடம் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் நடத்திய விசாரணையில், இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவி, நாடு முழுவதும் இறைச்சிக் கடைகளில் வேலை செய்து வருவதும், இவர்களில் பலருக்கும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்திருக்கிறது.