கடலூர் மாநகர மேயராக திமுகவை சேர்ந்த சுந்தரி ராஜா உள்ளார். இந்நிலையில் தங்கள் வார்டுகளில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை என திமுக கவுன்சிலர்கள் 10 பேர் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். வரும் 31 ஆம் தேதி உண்ணாவிரதம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். மேலும் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய போவதாகவும் அறிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் திமுக மேலிடம் கதி கலங்கி நிற்கிறது.
