இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி நமோ செயலி மூலம் உரையாற்ற போவதாக பிரதமர் மோடி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
எங்களின் கடின உழைப்பாளர்களுடன் இன்று ஒரு உரையாடலான ‘எனது பூத் வலிமையான பூத்’ என்னும் தலைப்பில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் நமோ செயலி மூலம் இன்று மாலை 5 மணிக்கு உரையாட நான் காத்திருக்கிறேன்
தமிழ்நாட்டில் உள்ள நமது காரியகர்த்தாக்கள் எப்படி மக்கள் மத்தியில் பணியாற்றுவதும், நமது கட்சியின் நல்லாட்சி நிகழ்ச்சி நிரல் மாநிலம் முழுவதும் திறம்பட தெரிவிக்கப்படுவதை உறுதி செய்வதும் பாராட்டுக்குரியது.
தி.மு.க.வின் தவறான ஆட்சியால் தமிழகம் சோர்ந்து போய், எங்கள் கட்சியை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறது என்பதும் அதே உண்மைதான்.