தொடர் சர்ச்சை: திரைக்கு வருமா ‘பீஸ்ட்’?

தொடர் சர்ச்சை: திரைக்கு வருமா ‘பீஸ்ட்’?

Share it if you like it

பீஸ்ட் திரைப்படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் போர் கொடி உயர்த்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. இதில், கதாநாயகியாக பூஜா ஹெக்டே, இயக்குனர் செல்வராகவன், யோகி பாபு மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதனை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அந்த வகையில், கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ’பீஸ்ட்’ பட ட்ரைலர் வெளியானது. இதையடுத்து, விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் அவருக்கு கட் அவுட் வைத்து, பால் அபிஷேகம் செய்தனர். இதற்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுச்சாமி, பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள் மீதும், தடுக்கத் தவறிய நடிகர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இதைத் தொடர்ந்து, ட்ரைலரில் இடம் பெற்றிருந்த காட்சிகள் இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வகையி்ல் இருந்தது. எனவே, அப்படத்தை எங்கள் நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று குவைத் நாடு அதிரடியாக உத்தரவிட்டிருந்தது. இப்படியாக, பீஸ்ட் திரைப்படத்திற்கு தொடர்ந்து பிரச்னை மேல் பிரச்சனை வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் அமைப்பும் பீஸ்ட் படத்தை தடை செய்ய வேண்டும் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. “இஸ்லாமியர்கள் மட்டுமே வெடிகுண்டு, துப்பாக்கிச்சூடு கலாசாரத்தில் ஈடுபடுவது போலவும், நாட்டின் அமைதிக்கும் இறையாண்மைக்கும் எதிராக செயல்படுவது போலவும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் என்ற எண்ணத்தை திரைத்துறையினர் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். தற்பொழுது புனிதமான ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். அந்தவகையில், தீவிரவாதிகளாக காட்ட முயற்சி செய்வது கடும் கண்டனத்திற்குறியது. எனவே, இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது. இதனால் திட்டமிட்டபடி பீஸ்ட் படம் திரைக்கு வருமா அல்லது தடையில் சிக்குமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

/https://www.opindia.com/2022/04/islamist-outfit-joseph-vijay-beast-film-ban/


Share it if you like it