பெங்களூரு தேவாலயத்தில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு வித்யாரண்யபுரா பகுதியான தொட்டபெட்டஹள்ளி அருகே உள்ளது காவேரி லே – அவுட். இங்கு ஒரு கிறிஸ்தவ தேவாலயம் இருக்கிறது. இத்தேவாலயத்தின் அருகே ஒரு தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்பதால், தங்களது 6 வயது மகளை தேவாலயத்தில் பணிபுரியும் சைமன் பீட்டர் என்பவரிடம் விட்டுவிட்டு செல்வது வழக்கம். இதனை தனக்கு சாதமாக்கிக் கொண்ட சைமன் பீட்டர், சிறுமிக்கு ஆபாசப் படங்களை காட்டி, பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இப்படியே அச்சிறுமிக்கு 14 வயதாகும் வரை பாலியல் வன்கொடுமையை தொடர்ந்து வந்திருக்கிறார் சைமன் பீட்டர்.
மேலும், இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என்று சிறுமியை மிரட்டி இருக்கிறார். இதனால் பயந்து கொண்டு அச்சிறுமியும் தனது பெற்றோரிடம் சொல்லவில்லை. அதேசமயம், அதே தேவாலயத்தில் பணிபுரியும் சாமுவேல் டிசோசா என்பவரிடம் கூறியிருக்கிறார். இதை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட சாமுவேல் டிசோசாவும், அச்சிறுமியை மிரட்டி 2 ஆண்டுகள் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இந்த விஷயம் அரசல்புரசலாக அச்சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவரவே, சாமுவேல் டிசோசாவை கண்டித்திருக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, தொடர் பாலியல் டார்ச்சரால் அச்சிறுமி கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானார்.
இதையடுத்து, அச்சிறுமிக்கு மனநல ஆலோசனையும், சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அச்சிறுமி பூரண குணமடைந்து விட்டார். தற்போது, அச்சிறுமிக்கு 18 வயதாகிறது. இந்த சூழலில், கடந்த 12 ஆண்டுகளாக தனது நேர்ந்த பாலியல் டார்ச்சர் குறித்து, அச்சிறுமி போலீஸில் புகார் கொடுத்தார். இதன் தொடர்ச்சியாக, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சைமன் பீட்டர், சாமுவேல் டிசோசா ஆகிய இருவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழும், இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சித்த 6 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விாசரித்தி வருகிறார்கள். 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்திருக்கும் இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.