ரயில் நிலையத்தில் மசூதி: பொதுமக்கள் கடும் கண்டனம்!

ரயில் நிலையத்தில் மசூதி: பொதுமக்கள் கடும் கண்டனம்!

Share it if you like it

பெங்களூரு ரயில் நிலையத்தில் போர்ட்டர்களின் ஓய்வறையை இஸ்லாமியர்கள் மசூதியாக மாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவத்திற்கு பல்வேறு ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ளது கே.எஸ்.ஆர். எனப்படும் கிராந்தி சங்கொலி ராயண்ணா ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தில்தான் பிளாட்பார்ம் எண் 5-ல் உள்ள போர்ட்டர்களின் ஓய்வறையை சட்டவிரோதமாக மசூதியாக மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த காணொளி ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வைரலானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுச் சொத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து மசூதியாக மாற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் இந்திய ரயில்வே நிர்வாகத்திடமும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த ஓய்வறை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மசூதியாக மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் யாரும் இந்த குறிப்பிட்ட அறைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மசூதி மஸ்ஜித்-இ-நூரானி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இக்காணொளிதான் கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ரயில் நிலையத்திற்குள் மசூதி அமைக்க அனுமதித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், பெங்களூரு கே.எஸ்.ஆர். ரயில் நிலையம் மாநிலத்தின் மிக முக்கியமான ரயில் நிலையமாகும். இந்த ரயில் நிலையத்தைச் சுற்றி பல மசூதிகள் இருந்தாலும், நடைமேடையில் தொழுகைக்கு அனுமதி வழங்கி இருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு, போர்ட்டர்களின் ஓய்வறையை மசூதியாக மாற்றிய சம்பவத்திற்கு பல்வேறு ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

/https://twitter.com/OpIndia_com/status/1488731402086531072


Share it if you like it