பாரதம் ஒரு பீனிக்ஸ் பறவை – கார்கில் நினைவலைகள்

பாரதம் ஒரு பீனிக்ஸ் பறவை – கார்கில் நினைவலைகள்

Share it if you like it

சரியாக 22 வருடங்களுக்கு முன் நாம் நம் எதிரிகளை சிதற அடித்து வெற்றி பெற்ற நாள்.
நாடே கொண்டாடுகிறது.
அன்று தன்னுயிர் தந்து நம் மண்ணை காத்த அனைத்து (527) வீரர்களுக்கும் நம் வீர வணக்கங்கள்.

இதுவரை எல்லோரும் சொன்னது தான்.
ஆனால் இதை தாண்டி இந்த நாட்டின் சக்தி என்னவென்று அறிதல் வேண்டும்.

1947 முதல் நம்மிடம் தொடர்ந்து அவசியமே இல்லாமல் மோதிவந்த ஒரு முட்டாள் நாட்டின் முதுகெலும்பு உடைந்த நாளாக பார்க்கிறேன்.

48 ல் அவர்களின் மூக்கு உடைந்தது.
1965 ல் இடுப்பு உடைந்தது.
1971 ல் கைகள் உடைந்தது.
1999 ல் முதுகெலும்பு நொறுங்கியது.

ஒரு நாட்டின் உண்மையான பலம் அதன் சுயசாரபே ! உண்மையான அதன் வளங்களை மக்களை அந்த நாடு எப்படி கையாள்கிறது என்பதில் இருக்கு அதன் பலம்.

பாகிஸ்தான் போல மக்களை எப்போதும் ஒரு தீவிரவாத சிந்தனையில், அல்லது ஒரு மதத்தின் வெறியில், அந்த நெருப்பில் குளிர் காயும் அரசியல்வாதிகள் அல்லது ராணுவம் இருக்கும் நாடு தன் உண்மையான சக்தியை உணராது.
லோக்கல் ரவுடி மாமூல் கேட்பது போல தன் இருப்பிட பலத்தை சூழ்நிலையை பயன்படுத்தி உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்காவிடம் இருந்து காசு பறிப்பதை ஒரு அரசே செய்தால் அந்த நாட்டு மக்களுக்கு என்ன தன்னம்பிக்கை இருக்கும்??

99 க்கு முன் நடந்த சண்டைகளில் அந்த நாடு தோற்றாலும் தூக்கி விட அமெரிக்கா வந்தது.
ஆனால் 99 க்கு பிறகு அந்த நாட்டின் நயவஞ்சக தீவிரவாத செயலில் (2001) தாமும் அடிவாங்கியதால் அமெரிக்கா கை விட்டது.
பாக்கிஸ்தான் பிச்சை எடுக்க தொடங்கியது.

ஆனால் இந்தியாவோ தன் ஜனநாயகத்தை நம்பியது. இந்திரா குடும்பம் போன்றோரால் சோதிக்கப் பட்டாலும் மாற்று அரசியல் தலைமைகளால் பாதுகாக்கப் பட்டது. வளர்க்கப் பட்டது. அது இந்திய மக்களுக்கு சரியான நம்பிக்கையை தொடர்ந்து விதைத்தது.
இந்திய ராணுவம் இத்தகைய மக்களால் நிரம்பி வழிந்தது.

பலன் 1999 சண்டையில் இரு நாடுகளுக்கு சேதாரம் இருந்தாலும் இந்தியா முன்னிலும் வேகமாக எழுந்து நின்றது.

முன்னிலும் வேகமாக சுயசார்பில் முனைந்தது உலக நாடுகளை நம்பி இருக்காமல் தாமே தம் சொந்த காலில் ஊன்றி நின்று உலக நாடுகளுக்கு சவால் விடும் விதத்தில் வளர்ந்து நின்றது.

இடையில் சிறு தடைகள் வந்தாலும் 22 ஆண்டுகளில் உலகின் முதல் 5 பெரிய பொருளாதார சக்திகளில் ஒன்றாக மிளிர்கிறது.

ஆனால் இதே காலகட்டத்தில் பாக்கிஸ்தான் என்ன ஆயிற்று?
முல்லாக்கள் மற்றும் முட்டாள்களின் கையில் சிக்கி சின்னா பின்னமாகி திவால் ஆகும் நிலையில் இருக்கிறது. தினம் ஒரு நாட்டின் காலில் விழுந்து கடன் தள்ளுபடி கேட்டு அலைகிறது. கூடிய சீக்கிரம் சீனாவின் காலனி நாடாக மாறினால் வியப்பில்லை.
சுதந்திரம் கிடைத்த 75 வருடத்தில் மீண்டும் அடிமையான அவல சரித்திரம் நிகழப் போகிறது.
அதற்கு அந்த நாடு இஸ்லாமிய முல்லாக்களுக்கு நன்றி சொல்லட்டும்.

ஒரு போரின் உண்மையான நீண்ட கால வெற்றி இதுதான்.

காரணம் ஒரு போர் நடந்து அன்று வெற்றி பெற்றாலும் அந்த போரின் பின் விளைவுகளை அந்த நாடு எதிர் கொள்ள முடியாமல் போக வாய்ப்பு உண்டு.

இந்த நிலையில் பாக்கிஸ்தானின் அடிப்படையே மதவெறி, முட்டாள் முல்லாகள் என்பதால் இவர்களால் தோற்றாலும் பின் தவறை உணர்ந்து போராடி நல்ல நிலைமைக்கு வந்த ஜப்பான், ஜெர்மனி போன்று வளர முடியாமல் நாசமாக போகிறது.

ஆக நாம் இன்று கொண்டாடுவது இந்த நாட்டின் நம்பிக்கையை! உள்ளார்ந்த சக்தியை ! நம் மேன்மை மிக்க முன்னோர்களை! அவர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்த பாடங்களை ! அதன் வழி நடந்து மேலும் வளறுவோம்.

ஜெய் ஹிந்த் !!
பாரத அன்னை வாழ்க !!


Share it if you like it